பல கோடி ரூபாய் மதிப்புள்ள காரை மண்ணுக்குள் புதைத்த கோடீஸ்வரர்.!!! கோபத்தில் எடுத்த அதிர்ச்சி முடிவு.

Loading...
பிரேசில் நாட்டை சேர்ந்த மிகப் பெரிய கோடீஸ்வரர் ஒருவர், தனக்கு சொந்தமான, பத்து லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 'பெண்ட்லே' சொகுசு காரை புதைக்க விரும்புவதாக விளாம்பரப்படுத்தினார்.   

அதற்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா? இறப்புக்கு பின்னர் இந்த கார் எனக்கு  பயன்படும் என்று கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைத்த செய்தார்.
இதைக்கேட்ட, பத்திரிகைகளும், ஊடகங்களும், "பைத்தியக்காரன் பத்துலட்சம் டாலரை வீணடிக்கிறானே, இவன் என்ன முட்டாளா? என்றெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
பொதுமக்கள் அந்த நபரை திட்டி தீர்த்தார்கள் . அந்த காரை புதைப்பதாக சொன்ன, அந்த தேதியும் வந்தது.
அனைவரும் ஆவலாக என்ன நடக்க போகிறது என்று தெரிந்து கொள்ள அந்த இடத்தில் கூடினர்கள்.
'பெண்ட்லே' காரை புதைக்கும் அளவுக்கு பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டது.
அதன் பிறகு, அந்த புதிய சொகுசு காரை அந்த இடத்திற்கு கோடீஸ்வரர் கொண்டுவந்தார்.
கூடியிருந்த மக்கள் அனைவரும், பொறாமையாக பார்த்துகொண்டிருந்தனர். 
சிறிது நேரத்தில் அந்த சொகுசு காரை பள்ளத்தில் அவர் இறக்கினர். 
பள்ளத்தில் காரை இறக்கிய அவரது பைத்தியக்காரத்தனத்தை கண்டு அனைவரும் திட்டிதீர்த்தனர்.
விலை உயர்ந்த பொருளை இப்படி வீணடிக்கிறீர்களே? இது எப்படி உங்கள் மரணத்திற்கு பிறகு பயன்படும்? அதற்கு பதில் யாருக்காவது தானமாக கொடுத்தால், அவர்களுக்காவது பயன்படுமே... என்று கோபத்துடன் கேட்டனர்.
அப்போது, அந்த பணக்காரர் சொன்னார்... நான் காரை புதைக்கவில்லை. யாராவது அந்த முட்டாள் தனத்தை செய்வார்களா?...
உங்கள் அனைவருக்கும் ஒரு உண்மையை உணர்த்தவே, இப்படி வித்தியாசமாக விளம்பரப்படுத்தினேன் என்றார்.
அப்படி என்ன உண்மை? என்று கேட்டனர் அனைவரும். 
இந்த கார் பத்து லட்சம் யூஎஸ் டாலர்தான். இதை புதைக்கிறேன் என்றவுடன், கோபப்பட்டு அனைவரும் கேள்வி கேட்கிறீர்களே... நான் உங்களை ஒன்று கேட்கிறேன். 
இதைவிட விலை மதிப்பில்லாதது, மனித உடல் உறுப்புகள்.
இதயம் , கண் , நுரையீரல் , கிட்னி, தோல், என மனித குலத்துக்கு பயன்படும் மதிப்புமிக்க உடல் உறுப்புகளை புதைப்பதால் என்ன லாபம்? அதை, யாருக்காவது தானமாக தரலாமே...
கோடிக்கணக்கானவர்கள் உடல் உறுப்பு தானத்தை நம்பி வாழ்கிறார்கள்.  
அவர்களுக்கு, உங்கள் உடல் உறுப்புகள் பயன்படட்டுமே... அனைவரும் உடலுறுப்பு தானம் செய்யுங்கள்.. உங்களுக்கு எல்லாம் அதை உணர்த்தவே இந்த நாடகம் என்றாராம்.
நம்மில் எத்தனை பேர் உடலுறுப்பு தானம் செய்திருக்கிறோம்? என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்வோம்.. 
உடலுறுப்பு தானம் செய்வோம்.!!! இறந்த பின்பும், மற்றவர்களுக்கு உயிர் கொடுப்போம்.!!!
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com