அந்த சம்பவத்தை குழந்தைகள் பார்த்துவிட்டார்களே!… மனமுடைந்து தாய் தற்கொலை

Loading...

நாள்தோறும் பெண்களில் எவரேனும் ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளாகுகின்றனர். தனது இரு குழந்தைகள் முன்பு சக ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் மனமுடைந்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பெங்களூர் எச்.ஏ.எல் நெல்லுருபுரம் பகுதியை சேர்ந்தவர் சுமித்ரா (26). இவருக்கு குமார் என்ற கணவரும், இரு மகன்களும் இருந்தனர். சிறு வயதில் இரு மகன்கள் இருந்தனர்.
இவர் வேலை செய்த அலுவலகத்தில் இவருடன் வேலை செய்த 23 வயதாகும் மகந்தேஷ் என்பவர் இவரை பாலியல் சீண்டல் செய்து வந்துள்ளார்.
மேலும் வீட்டுக்கே வந்து தன்னுடன் உறவு கொள்ளுமாறு சுமித்ராவிடம் கட்டாயப்படுத்தியதாக கூறபபடுகிறது. இதுகுறித்து கணவனிடம் சொன்னால், 2 குழந்தைகளையும் கொலை செய்துவிடுவதாக மகந்தேஷ் மிரட்டியுள்ளார்.
சம்பவத்தன்று, குமார் வேலைக்கு போன நேரத்தில் தனது நண்பர் சதீஷ் என்பவருடன் சுமித்ரா வீட்டுக்கு வந்த மகந்தேஷ், பாலியல் சீண்டல் செய்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் அடித்து உதைத்துள்ளார். இதெல்லாம் அவரது இரு மகன்கள் முன்னிலையில் நடந்துள்ளது. இதையடுத்து இரவே, சுமித்ரா தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
 இதுகுறித்து சுமித்ரா தந்தை அளித்த புகாரின்பேரில் பொலிசார் மகந்தேஷை கைது செய்துள்ளனர். அவரின் நண்பரை தேடுகிறார்கள்.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com