குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்த பெண்ணை காரோடு இழுத்துச்சென்ற காவலர்கள்

Loading...
                                                               


மும்பை : சாலை ஓரம் நின்ற காரில் தனது 7 மாத குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்துள்ளார் ஜோதி என்ற பெண். ஒரு வார்த்தை கூட சொல்லாமல் காரை போக்குவரத்து வாகனம் மூலம் ஈவு இரக்கமின்றி இழுத்து சென்றுள்ளனர் போக்குவரத்து காவலர்கள். தனது உடல் நிலை சரியில்லை நான் குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன் இழுத்து செல்வதை நிறுத்துங்கள் எனக் அந்த பெண் கூறியும் காரை இழுத்துச் சென்றுள்ளனர் மும்பை போக்குவரத்து போலிசார். இது குறித்து அந்த பெண் கூறுகையில். அங்கே நிறைய வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. என்னிடம் காரை விட்டு இறங்குகள் என்று கூட கூறாமல் நான் பால் கொடுத்துக் கொண்டிருப்பது தெரிந்தம் திடீர் என காரை இழுத்து சென்றனர். நான் கெஞ்சியும் காரை நிறுத்த வில்லை எனக் கூறியுள்ளார்.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com