சிப்ஸ் பாக்கெட்டால் சிறுவனுக்கு நடந்த விபரீதம்.! சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

Loading...
ஆந்திர மாநிலம் எழுரி நகரைச் சேர்ந்தவர் லக்‌ஷ்மணா ராய். இவர் தனது நான்கு வயது மகனுக்கு டைமண்ட் ரிங்ஸ் என்ற சிப்ஸ் பாக்கெட்டை வாங்கி கொடுத்துள்ளார்.அதனை உண்ட சில நிமிடங்களில் சிறுவன் மயக்கமடைந்தான். உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சிறுவன் தொண்டையில் ரப்பர் பொம்மை சிக்கியதால் மூச்சு அடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தெரிவித்தனர்.
சிப்ஸ் பாக்கட்டில் ரப்பர் பொம்மை இருந்ததது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிப்ஸ் பாக்கெட்டில் பரிசாக ரப்பர் பொம்மையை அந்த நிறுவனம் வைத்தது தெரிய வந்துள்ளது.
இதனை சிறுவன் விழுங்கியதால் இந்த பரிதாபம் நடந்துள்ளது. இந்நிலையில் சிப்ஸ் நிறுவனம் மற்றும் அந்த கடையின் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த ரப்பர் பொம்மையை விழுங்கிய சிறுவன் மரணமடைந்த சம்பவம் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com