ரூ. 2 கோடி தருகிறேன், என்னை விட்டுடுங்க: கெஞ்சும் பிக் பாஸ் போட்டியாளர்

Loading...
 விகாஸ் குப்தா இந்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து தன்னை வெளியே விட்டால் ரூ. 2 கோடி தர தயார் என்று தெரிவித்துள்ளார்.
இந்தி பிக் பாஸ் வீட்டில் சண்டை, அடிதடி என்று செமயாக இருக்கிறது. நடிகை ஷில்பா ஷிண்டேவுக்கும், விகாஸ் குப்தாவுக்கும் இடையே ஏழாம் பொருத்தமாகவே உள்ளது.

அடிக்கடி இருவரும் சண்டை போடுகிறார்கள்.
அடிதடி 
விகாஸ்
லக்சுரி பட்ஜெட்டின்போது ஷில்பா ஷிண்டே, விகாஸ் குப்தா இடையே அடிதடி சண்டையாகிவிட்டது. இதையடுத்து விகாஸ் பிக் பாஸ் வீட்டில் இருந்து தப்பியோட முயன்றார்.

கதவு 
எஸ்கேப்
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே செல்லும் கதவுகளில் ஒன்று பூட்டாமல் இருந்தது. அந்த வழியாக விகாஸ் வெளியே சென்றார். உடனே பிக் பாஸ் அவரை கன்பெஷன் அறைக்கு அழைத்து புத்திமதி சொன்னார். விகாஸ் முன்பும் ஒரு முறை தப்பியோட முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 2 கோடி 
விட்டுடுங்க
இதற்கு மேல் நான் பிக் பாஸ் வீட்டில் இருக்க மாட்டேன். ஒப்பந்தத்தை மீறி பாதியில் வெளியே செல்ல ரூ. 2 கோடி அபராதமும் தந்து விடுகிறேன் என்று விகாஸ் கெஞ்சியும் பிக் பாஸ் ஒத்துக்கொள்ளவில்லை.

சல்மான் 
டோஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான் கானுக்கு போட்டியாளர்கள் கெட்ட வார்த்தை பேசினாலோ, சண்டை போட்டாலோ, எஸ்கேப் ஆக முயன்றாலோ பிடிக்காது. உடனே லெப்ட் அன்ட் ரைட் வாங்கிவிடுவார். இந்த சனிக்கிழமை சல்மானிடம் இருந்து விகாஸுக்கு செம டோஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குட்டி பாப்பாவின் செம டான்ஸ் வீடியோ
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com