உலகமே பார்த்து பயந்த ஹிட்லரை நேருக்கு நேர் எதிர்த்து அடிபணிய வைத்த வீர தமிழன்.!!!

Loading...
உலகமே பார்த்து பயந்த ஹிட்லரை எதிர்த்து அடிபணிய வைத்தது ஒரு தமிழன் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான இந்திய சுதந்திர போராட்டத்தின் போது "ஜெய்ஹிந்த்" என்கின்ற ஒற்றை சொல் ஒவ்வொரு இந்தியரின் பேச்சிலும், மூச்சிலும் உறைந்து போய் இருந்தது.
அந்த சொல்லை விதைத்தவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான் என்கின்ற நம்பிக்கை இந்திய மக்களின் மனதில் விதைக்கப்பட்டது.
ஆனால், "ஜெய்ஹிந்த்" என்கின்ற வார்த்தையை  பிரகடணப்படுத்தியவர் ஒரு தமிழர் என்பதும், அந்த தமிழரிடம் சர்வாதிகாரி ஹிட்லர் மன்னிப்பு கேட்ட வரலாறும் தற்போது வெளிவந்துள்ளது.
வரலாற்று ஆசிரியர் "ரகமி" என்பவர் "ஜெய் ஹிந்த் செண்பகராமன்" என்கின்ற நூலினை எழுதியுள்ளார்.
இந்த நூலில், இருட்டடிப்பு செய்யப்பட்ட ஒரு தமிழரின் வரலாறு ஆதாரத்துடன் பதிவு செய்யபட்டுள்ளது.
குமரியில் பிறந்த செண்பகராமன், திருவனந்தபுரத்தில் பள்ளி படிப்பை முடித்திருக்கிறார்.
இளம் வயதிலேயே இந்திய நாட்டின் விடுலைக்காக பல்வேறு போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டார்.
அந்த நேரத்தில், இந்தியாவில் தங்கியிருந்த ஜெர்மனி நாட்டு உளவாளி "சேர் வால்டர் வில்லியம் ஸ்ரிக்லாண்ட்", என்பவர் செண்பகராமனின்  துணிச்சலை கண்டு வியந்தார்.
அவரது உதவியுடன், இந்தியாவில் இருந்து வெளியேறிய செண்பகராமன் இத்தாலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்திருக்கிறார். 
இத்தாலி நாட்டில் இருந்தபோது, அங்கு இலக்கியம், விஞ்ஞானம் போன்றவற்றை செண்பகராமன் படித்தார். அதன் பின்னர், சுவிட்சர்லாந்தில்  படிப்பை தொடர்ந்த அவர், மேல் படிப்பிற்காக ஜெர்மனி சென்றார்.
ஜெர்மனியில் தங்கியிருந்தபடியே இந்திய ஆதரவு சர்வதேச கமிட்டி மூலம் இந்திய நாட்டின் விடுதலைக்காக செண்பகராமன் ஆதரவு திரட்டத் தொடங்கினார். 
அந்த காலக்கட்டத்தில், ஜெர்மனி மன்னர் கெய்சரின் நட்பு அவருக்கு கிடைத்தது. 
1930 ஆம் ஆண்டு இந்திய வர்த்தகசபை சமாஜத்தின் பெர்லின் பிரதிநிதியாக செண்பகராமன் நியமிக்கப்பட்டார்.
1933-இல் ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சி ஏற்பட்டது. அப்போது அவருடன் செண்பகராமனுக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்ட து.
ஒருமுறை ஹிட்லர் அவரது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது “சுதந்திரம் பெறக்கூடிய தகுதி இந்தியர்களுக்கு கிடையாது” என்று ஹிட்லர் கூற அதை கேட்ட செண்பகராமன் கடும் கோபம் அடைந்துள்ளார்.
 “இந்தியா நாட்டின் பாரம்பரியம், இந்தியத் தலைவர்களின் திறமைகளைப்பற்றி தரக்குறைவாக நீங்கள்பேசுவதை என்னால் அனுமதிக்கமுடியாது” என்று ஆவேசமாக கூறிய செண்பகராமன், கொஞ்சம் கூட அஞ்சாமல், உலகமே பார்த்து மிரண்ட சர்வாதிகாரி ஹிட்லருடன் இதுதொடர்பாக நீண்ட நேரம் விவாதித்திருக்கிறார்.
அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் விவாதம் செய்த செண்பகராமனின் வாத திறமையை கண்டு ஹிட்லர் வியந்து போயிருக்கிறார்.  
இறுதியில் செண்பகராமனிடம் பணிந்த ஹிட்லர் தன்னை மன்னித்துக் கொள்ளும்படி கேட்டுள்ளார்.
ஆனால், செண்பகராமனோ, வார்த்தைகளால் மன்னிப்பு கேட்பதைவிட எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேளுங்கள் என்று வற்புறுத்த, ஹிட்லரும் அப்படியே செய்திருக்கிறார்.
இந்த சம்பவம், நாஜிக்கள் மத்தியில் செண்பகராமன் மீது பெரும்கோபத்தை உண்டாக்கியது.
இதனால், சதித்திட்டம் தீட்டிய அவர்கள், சாப்பாட்டில் விஷம் வைத்து செண்பகராமனை கொன்றனர். 26-5-1934 அன்று செண்பகராமன் மரணம் அடைந்தார்.
“தொட்டிலில் அழும் பிள்ளைகள் கூட ஹிட்லரின் பேரைக் கேட்டால் வாயை மூடிக்கொள்ளும்” என்று ஜெர்மனி நாட்டில் ஒரு பழமொழி உண்டு.
அப்படிப்பட்ட சர்வாதிகாரியை, நேருக்கு நேர் எதிர்த்து, அவரை மன்னிப்பு கேட்க வைப்பது சாதாரண காரியம் இல்லை. ஆனால், ஒரு வீர தமிழர் அதை செய்தார்.
தமிழரின் இந்த வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. 
17.7.2008 அன்று வீரத்தமிழர் செண்பகராமனுக்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் அவரது சிலையினை அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com