மன்னனின் காமவெறியால் தீக்குளித்து இறந்த 74,500 பெண்கள்

Loading...
மண்ணாசையின் காரணத்தால் மூண்ட போருக்கு இணையாக, பெண்ணாசை காரணத்தால் மூண்ட போர்களும் இந்திய வரலாற்றில் உருவாகியுள்ளது. பொதுவாகவே, ஒரு நாட்டை, பகுதியை வெற்றி கண்டுவிட்டால், அந்த நாட்டின் வீரர்களை அடிமைகளாக, கைதிகளாகவும் அழைத்து செல்வதையும், ராணி, இளவரசிகளை அந்தபுரத்திற்கு அழைத்து செல்வதையும் தான் வழக்கமாக வைத்திருந்தனர்.

பல ராஜ்ஜியங்கள், தாங்கள் தோல்வியடைய போகிறோம் என்ற நிலையை அறிந்துக் கொண்டால் உடனே தங்கள் இராணி, இளவரசிகளுடன் தற்கொலை செய்துக் கொள்வார்கள். அப்படி, வட இந்தியாவில் ஒரு அழகிய ராணியை அடைய சுல்தான் மேற்கொண்ட போரும், அதன் முடிவும் பற்றிய வரலாறு தான் இது...

கவிதை!

ராணி பத்மாவதியின் முதல் வரலாறு குறிப்பு, மாலிக் முகமது ஜாயசி என்பவர் 1540ல் எழுதிய கவிதை தான் என அறியப்படுகிறது. இதில் தான் ராணி பத்மாவதி வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் முழுமையாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஆனால்,சிலர் ராணி பத்மாவதி என்பவர் நிஜமாக வாழ்ந்தவர் இல்லை என்றும், அவர் ஒரு கற்பனை கதாபாத்திரம் என்றும் கூறுகிறார்கள்.

இலங்கையை சேர்ந்தவர்...

பத்மாவதி சிங்களா எனும் பகுதியை சேர்ந்த இளவரசி என அந்த கவிதையில் கூறப்பட்டுள்ளது. இது சில வருடங்களுக்கு முன்னர் சிலோன் என்றும், இப்போது இலங்கை என்றும் அழைக்கப்படும் இடமாகும். இவரது தந்தையின் பெயர் கந்தர்வேசன் என்றும் கூறப்படுகிறது.

ரானா ராவால் ரத்தன் சிங்!

ராஜ்புட்-ன் அரசரான ராஜா ரானா ராவால் ரத்தன் சிங் பத்மாவதியின் சுயம்வரத்தில் பங்குபெற்று வென்று, இவரை திருமணம் செய்து வந்தார் என கூறப்படுகிறது. ஆனால், வரலாற்று கதையில் ஒரு ட்விஸ்ட் இருக்க வேண்டும் அல்லவா?

சண்டை...

இங்கு தான் இரு திருப்புமுனை அமைந்தது. சுயம்வரத்தில் மற்ற இளவரசர்களை வென்றால் மட்டும் போதாது. இறுதியாக என்னையும் வெல்ல வேண்டும் என்ற நிபந்தனை விதித்தாராம் இளவரசி பத்மாவதி.
அவரது நிபந்தனை படியே, ராஜா ரத்தன் சிங் பத்மாவதியை வென்று, திருமணம் செய்து அழைத்து வந்தார் என கூறப்படுகிறது.

பேசும் கிளி...

ராணி பத்மாவதியிடம் ஒரு பேசும் கிளி இருந்ததாம். அது ராணியின் அழகை பற்றி பறைசாற்றி பேசிக் கொண்டிருக்குமாம். அந்த கிளியின் பெயர் ஹரி-மணி என்றும் கூறப்பட்டுள்ளது.

அழகு புகழ்!

வட இந்தியாவில் முகமதுகளின் பேரரசு பரவியிருந்த காலத்தில் சித்தூர் ராணி பத்மாவதியின் அழகு மிகவும் பிரபலமாக பரவியது. இவரின் அழகு பற்றி கேள்விப்பட்ட சுல்தான் ராணி பத்மாவதியை தனது அந்தபுரத்திற்கு வர அழைத்தான்.
இந்த காரணத்தால் சுல்தான் மற்றும் சித்தூர் அரசுக்கு போர் மூண்டது. சித்தூரை சுல்தான் அரசு முற்றுகையிட்டது. எதிர்த்து போரிட முடியாத சூழல் உருவாகவே, சித்தூர் ராஜாக்கள் தங்கள் வாளால் தங்கள் கழுத்தை அறுத்து கொண்டு இறந்துவிட்டார்கள்.

தீக்குளித்து...

அந்த புறத்தில் இருந்த பெண்கள் தீக்குளித்து இறந்து போனார்கள். இந்த காட்சியை தொலைவில் இருந்த கண்ட சுல்தான் அந்த நெருப்பு வளையத்தை நெருங்கி சென்றான்.
அவன் நெருங்கும் போது சுல்தானிடம் பத்மாவதி, இது தான் ராஜபுத்திர பெண் உனக்கு அளிக்கும் வரவேற்ப்பு என கூறி தீக்குளித்து இறந்தார்.

74,500 பேர்!

சசுல்தானிடம் இருந்து தங்கள் கற்பை காத்துக் கொள்ள 74,500 பெண்கள் தீக்குளித்து இறந்தனர் என கூறப்படுகிறது.
சுல்தான் கில்ஜி வருவதற்கு முன்னர், பத்மாவதி உமாயுனை உதவிக்கு அழைக்க ராக்கி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், உதவி வரும் உன்னரே சுல்தான் படை சூழ்ந்துவிட்டதால், அனைவரும் இறந்து போனதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே வட இந்தியாவில் ரக்சா பந்தன் கொண்டாடப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.
 
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com