குப்பை அள்ளும் அம்மாவை அடித்து காதலிக்கு செல்போன் வாங்கிய மகன் : கொடூரம்

Loading...
தேவிகா…. மாநகராட்சியில் குப்பை அள்ளும் தொழில் செய்து வருபவர். மழையோ , வெயிலோ..தெரு தெருவாக அலைந்து குப்பை கூட்டி, அள்ளி டாஸ் பின்னில் கொண்டு போய் போடும் ஒரு பரிதாப தாய்.
மாதமானால் ஆறாயிரம் ரூபாய் கைக்கு வரும். கணவன் குடித்து குடித்து செத்துப் போனான். இரண்டு பிள்ளைகள். மூத்தமகன் சின்னா.
அடுத்து ஒரு தங்கை வித்யா மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். சின்னா ஒரு தறுதலை.
கல்லூரிக்குப் போவதாகக் கூறி விட்டு அடிதடி, தகராறு, இன்னொரு கல்லூரி மாணவர்களுடன் வெட்டு குத்து, பஸ் டே, குடி என பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுபவன்.
அந்த எல்லைத் தாய் ஒரே மகன் என் என்பாதால் உயிரைக் கொடுத்து வளர்த்தாள். கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தாள்.
மகன்தான் கொள்ளி போட வேண்டும் என்று பெருமையாகக் கூறுவாள். சின்னா விற்கு ஒரு காதலி. திவ்யா என்று பெயர்.
ஆடம்பரப் பிரியை. டிபன் சாப்பிடக் கூட மாலுக்கும், உயர்தர அசைவ ஹோட்டலுக்கும் தான் அழைப்பாள்.
சின்னாவும் ஏதாவது போய் சொல்லி , அம்மாவை ஏமாற்றி, திட்டி, பணம் வாங்கிப் போவான். ஜாலியாக ஊர் சுற்றுவார்கள்.
இதற்காகவே ஒரு அடிதடியில் இறங்கி கிடைத்த பணத்தில் ஒரு பைக் வாங்கி இருந்தான் சின்னா.
அடுத்த வாரம் தீபாவளி. திவ்யா சின்னாவிடம் ஒரு ஆப்பிள் போன் வேண்டும் என்று அடம் பிடித்தாள்.
“இன்னொரு நண்பன் வங்கித் தருகிறேன் என்கிறான் ஆனால் அவனை லவ் பண்ணச் சொல்றாண்டா” உன்னால எனக்கு எதுவுமே வாங்கித் தர முடியாதுடா..” என்று கள்ள அழுகை அழ..!
எரிச்சல் ஆனான் சின்னா. உனக்கு ஆப்பில் போன் தானே வேணும்.. தீபாவளி அன்னிக்கு உன் கையில் போன் இருக்கும்..” என்று கூறி விட்டு சென்றான்.
அன்று இரவு அம்மா சோர்ந்து போய் படுத்திருந்தாள். மழையில் குப்பை அள்ளி கைகால்கள் எல்லாம் புண் வந்து ரணமாகி இருந்தது.
ஜுரமும் இருந்தது. தங்கை இருவருக்கும் சப்பாத்தி வாங்க அம்மா உணவகம் போய் இருந்தாள்.
போதையில் வீட்டுக்கு வந்தான் சின்னா..” எனக்கு முப்பது ஆயிரம் பணம் வேண்டும் என்றான். அம்மா ஷாக் ஆனாள். அவ்வளவு பணத்துக்கு எங்கேடா போவேன் என்றாள் அந்தத் தாய்.
எகிறினான்..கைக்கு கிடைத்ததை போட்டு உடைத்தான், செத்துப் போறேன் என்றான். அம்மா பயந்து அலறினாள்..
“பணம் தானே எங்காவது வட்டிக்கு வாங்கித் தர்றேண்டா ” என்றாள். அடுத்த நாள் வேலை பார்க்கும் இடத்தில எல்லோரிடமும் வட்டிக்கு பணம் கேட்டாள் அந்த பரிதாப அம்மா.
குப்பை லாரி ஓட்டும் முனிஸ்வரன் என்பவர் பத்து ரூபாய் வட்டிக்கு பணம் கொடுத்தார். “இங்க பாரு தேவகி..மசமமானா வட்டி சரியா வந்துடனும்..இல்லன்னா கை வச்சுடுவேன்” என்று மிரட்டி பணம் கொடுத்தார்.
சின்னா பணத்தை வாங்கி..நண்பர்களிடம் குறைக்கு கொஞ்சம் பணம் கேட்டு புத்தம் புதிய ஆப்பிள் 6 மடல் போன் வாங்கி திவ்யாவிடம் பந்தாவாகக் கொண்டு போய் கொடுத்தான்.
கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாள் திவ்யா. மறுநாள் அம்மாவிற்கு மிகவும் முடியாமல் போனது.
இரவும் அடுத்த நாளும் சின்னா வீட்டுக்கே வரவில்லை. பக்கத்தில் உள்ளவர்கள் அம்மாவை ஸ்டான்லி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்கள்.
சின்னவை தேடினார்கள். நான்கு நாள் கழித்து வீட்டுக்கு வந்தான். வீட்டில் யாரும் இல்லை. அருகிலும் யாரும் இல்லை. வீட்டில் சாப்பாடும் இல்லை. கடுப்பானான்.
அம்மாவைத் தேடி கடும் கோபத்துடன் வேலை செய்யும் இடத்திற்குப் போனான். அங்கு ” உன் அம்மா ரெண்டு நாளைக்கு முன்னாடி செத்துப் போச்சு.. உன்னைத் தேடினோம் நீ இல்லை..! உன் அம்மாவை பிண அறையில் வச்சுருக்காங்கப்பா ”
என்க திடுக்கிட்டு நின்றான். “என் தங்கச்சி”..என்றான்..!! “யாரோ உங்க உறவுக்காரங்க வாங்கிட்டுப் போய்ட்டாங்க..”என்றார்கள்.
ஆஸ்பத்திரிக்கு ஓடினான்.
பிண அறையில் ஒரு ஐஸ் பெட்டியில் அம்மா நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தாள்………….
                                               
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com