பிறந்த 18 நாட்களில்… கதறி அழுத குழந்தையை நடிக்க வைத்த பாகுபலி இயக்குநர்!

Loading...
                                                          
பாகுபலி படத்தில்  ஒரு குழந்தையை ரம்யா கிருஷ்ணன் உயர்த்தி காட்டி மகேந்திர பாகுபலி என முழக்கமிடுவார்.
இந்த காட்சி படத்தின் ஹைலட் காட்சிகளில் ஒன்று. அந்த குழந்தையை பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் வந்துள்ளன.
அந்த குழந்தையின் பெயர் அக்ஷிதா வால்ஸ்லேன். இப்போது வயது ஒன்னரை. கேரள மாநிலம் காலடி அருகே உள்ள நீலகேஸ்வரம் தான் சொந்த ஊர். அது ஒரு பெண் குழந்தை. பிறந்த 18 நாட்களே ஆன அந்த குழந்தையை படத்தில் நடிக்க வைத்துள்ளனர்.
அந்த குழந்தை சம்பந்தப்பட்ட காட்சியை எடுப்பதற்கு மட்டும் 5 நாட்கள் செலவிட்டார்களாம். அந்த குழந்தையின் தாய் அருகிலேயே இருந்து அழும்போது பாலூட்டி வந்துள்ளார்.
படக் காட்சிகளின் போது குழந்தை திடீர் திடீரென அழத் தொடங்கி விடுமாம். இவற்றையெல்லாம் சமாளித்து படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார் ராஜமௌலி.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com