அன்னையர் தினம்... 120 வயது மாமியாருக்கு 80 வயது மருமகள் கொடுத்த மறக்க முடியாத பரிசு

Loading...
                                                            


உத்திரப்பிரதேசத்தில் 120-வயது மாமியாருக்கு, அவரது 80-வயது மருமகள் தான் வளர்த்த ஆடுகளை விற்று கழிப்பறை கட்டிக்கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தின் கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தனா. இவர் அன்னையர் தினமான நேற்று தனது மாமியருக்கு தனித்துவமிக்க பரிசினை வழங்கி அசத்தியுள்ளார்.
மத்திய அரசு துவங்கிய தூய்மை இந்தியா திட்டத்தின் தூதராக சாந்தனா திகழ்கிறார். கழிப்பறை கட்டுவதற்கான ஊக்கத்தொகையை பெற அரசு அதிகாரிகள் உதவாத காரணத்தினால், தான் வளர்த்து வந்த 5 ஆடுகளை விற்று கழிப்பறையை கட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், பொதுவெளியில் மலம் கழிக்கச் சென்ற தனது 102 வயதான மாமியார், தடுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் சொந்தமாக கழிப்பறை கட்ட முடிவெடுத்ததாகவும், அதை தற்போது நிறைவேற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
கழிப்பறை கட்டுவதற்கு கிராம நிர்வாகிகள் ஆதரவு அளிக்காததால், தனது தாய் சொந்தமாக கழிப்பறையை கட்டியதாக சாந்தனாவின் மகன் ராம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com