செவ்வாய் கிரகத்தில் பீர் பாட்டில்: திடுக்கிடும் ஆதாரத்தை வெளியிட்ட நாசா

Loading...

செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா? தண்ணீர் உள்ளனவா என ஆராய்ச்சியில் இறங்கியுள்ள நாசா, அங்கிருந்து மது போத்தல் ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டு திடுக்கிட வைத்துள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, செவ்வாய் கிரகம் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
குறித்த ஆய்வின் வழியாக பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ள நாசா, தற்போது செவ்வாய் கிரகத்தில் மது போத்தல் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த புகைப்படத்தில் இருப்பது மது போத்தலாக இருக்கலாம் என்ற முடிவுக்கு ஆய்வாளர்களை கொண்டு சேர்த்துள்ளது.
சிவப்பு, பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த போத்தல் பீர் வகை மது போத்தலாக இருக்கலாம் என்ற முடிவுக்கு ஆவாளர்கள் வந்துள்ளனர்.
64 வயதாகும் தாமஸ் மில்லர் என்ற ஆய்வாளர் முதன் முறையாக குறித்த புகைப்படத்தில் வேறுபட்ட ஒரு வடிவத்தை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவில் அவரால் அந்த வடிவம் மது போத்தலாக இருக்கலாம் என உறுதிப்படுத்தியது.
செவ்வாய் கிரகத்தில் மது போத்தல் கண்டெடுக்கப்பட்டது, தற்போதைய சூழலில் அங்கு பயன்பாட்டில் இருப்பதையே சுட்டிக்காட்டுவதாக தாமஸ் மில்லர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் செவ்வாய் கிரகத்தில் பல்வேறு பொருட்கள் இருப்பது போன்ற புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படங்களை எல்லாம் பூமியில் இருப்பது போன்று நாம் உருவகப்படுத்தி பார்க்கிறோம் எனவும் ஒருசாரார் வாதிட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் நாசா வெளியிட்ட புகைப்படம் ஒன்று ஸ்பூன் போன்ற வடிவத்தில் அமைந்திருந்தது. மட்டுமின்றி மோதிரம், வளையம் மற்றும் பல்வேறு பொருட்களை இதுவரை நாசா புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது.

Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com