பாகிஸ்தானை விட தமிழகம் பகையா.? பாஜக அரசை கடுமையாக விமர்சித்த நமது எம்.ஜி.ஆர்.!

Loading...
                                                         
தமிழகத்தில் வறட்சியால் பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீரின்றி கருகியது. இதனையடுத்து தமிழக அரசு மத்திய அரசிடம் வறட்சி நிவாரணமாக 39,500 கோடியை கேட்டிருந்தது.
ஆனால் தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.1750 கோடியை ஒதுக்கியது. இது பற்றி நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்து கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தானை விட தமிழகத்தை பாஜக அரசு பகைமையாக நினைக்கிறதோ என்கிற அளவில்தான் இந்த நிதி ஒதுக்கீடு மட்டுமல்ல, சமீபத்திய மத்திய அரசின் அத்தனை நடவடிக்கைகளும் அமைந்திருக்கிறது.
அதில் குறிப்பாக மீண்டும் மீத்தேன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளத்திருக்கும் மற்றொரு கெடுமதி உத்தரவு. ஏற்கெனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் மக்களின் போராட்டம் இன்னும் முழுமையாக நிறைவடையாமலும், அப்பகுதி மக்கள் முழுமனதோடு நிம்மதி அடையாமலும் இருக்கும் நிலையில், மீத்தேன் திட்டத்திற்கு வலிய வந்து மத்திய பாஜக அரசு அனுமதி தந்திருப்பது தமிழகத்தை முழுமையான பாலைவனமாக மாற்றுவோம் என்னும் மூர்க்கத்தனத்தின் உச்சமாக கருதப்படுகிறது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் பார்த்தால் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் நேசிக்கிற தமிழகத்தை மாற்றி யோசிக்க வைக்கிற தவறான காரியமாக மத்திய அரசின் செயல்பாடு அமைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com