'நானும் தமிழன்தான்'... தமிழக விவசாயிகளுக்காக அமெரிக்காவில் பேசும் மார்கண்டேய கட்ஜு!

Loading...
                                                                 
சாக்ரமெண்டோ (யு.எஸ்): அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, நானும் ஒரு தமிழன் என்று கூறியுள்ளார்.
கலிஃபோர்னியாவின் தலைநகரான சாக்ரெமெண்டோ, டெக்சாஸில் டல்லாஸ், ஜார்ஜியாவில் அட்லாண்டா என மூன்று முக்கிய நகரங்களில் மார்க்கண்டேய கட்ஜு தமிழக விவசாயிகள் எதிர் நோக்கும் இன்னல்கள் பற்றி பேசப் போவதாக கூறியுள்ளார்.
ஃபேஸ்புக் புக்கத்தில் பதிவிட்டுள்ள கட்ஜ், தகவலுக்கு அடியில் 'நானும் ஒரு தமிழன்' என்று கையெழுத்து போடுவது போல் குறிப்பிட்டுள்ளார்.
சாக்ரெமெண்டா பகுதியில் இன்று சனிக்கிழமை மார்ச் 25ம் தேதி மாலை மூன்று மணி அளவில் Folsom, Duchow Way வில் உள்ள Masonic Centerல் கட்ஜு உரையாற்றுகிறார்.
டல்லாஸ் மாநகரத்தின் இர்விங் , N MacArthur Blvd ல் அமைந்துள்ள Radha Govind Dham வளாகத்தில் , சனிக்கிழமை ஏப்ரல் 1ம் தேதி அவருடைய நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
 மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மறுநாள் , ஏப்ரல் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அட்லாண்டா மாநகரில். Jones Bridge Road ல் உள்ள ஆச்சி உணவகத்தில் கட்ஜுவின் உரையுடன், கேள்வி பதில் நிகழ்ச்சியும் உண்டு. #SaveTamilNaduFarmer மற்றும் அட்லாண்டா தமிழ் மக்கள் அமைப்புகள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.
தமிழக விவசாயிகளின் இன்னல்களையும், அமெரிக்கத் தமிழர்கள் எந்த வகையில் உதவலாம் போன்ற திட்டங்களையும் முன் வைப்பார் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.
தொடர்ந்து தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜ் தமிழக விவசாயிகளுக்காக அமெரிக்க தமிழர்களிடம் நேரடியாக உரையாற்றி, கலந்துரையாடல் செய்ய இருப்பது பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com