என்னைப் பார்த்தால் கூப்பிடணும் போல தோணுமா? நீங்களே சொல்லுங்க பிளீஸ்!

Loading...

பெங்களூருவில் ‘உர்மி’ என்ற கன்னட படபிடிப்பின் இடைவெளியின் போது, நடிகை ஸ்வேதா பண்டித் தனது சக நண்பர்களுடன் சில விசயங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் ஆதங்கத்துடன் கூறியதாவது, சில நாட்களுக்கு முன்னர் நான் குடியிருக்கும் எலகங்கா துணைநகர் வீட்டின் அருகே சூப்பர் மார்கெட்டிற்கு எனது அம்மாவுடன் சென்றேன் ஷாப்பிங் முடித்து விட்டு வெளியே வந்தபோது, ஒரு பொருளை எனது அம்மா மறந்து விட்டு விட்டு வந்ததால் திரும்ப வாங்க ஷாப்பிங் சென்றார்.
அப்போது நான் தனியாக சாலை ஒரத்தில் நின்று கொண்டிருந்தேன்.
அப்போது பைக்கில் வந்த ஆப்பிரிக்க இளைஞர் ஒருவர் என்னை பார்த்து ‘ஆர்யுகமிங்’ என்று தவறான அர்த்தத்தில் கூப்பிட்டார். நான் பதில் கூறாமல் அமைதியாக இருந்தேன்.
பின்னர், அங்கிருந்து சென்ற வாலிபர் மீண்டும் என் எதிரே வந்து பைக்கை குறுக்கே நிறுத்தி, மீண்டும் அழைத்தார். அதனால் நான் ஆத்திரம் அடைந்து முறைத்து பார்த்தேன். அதை பொருட்படுத்தாமல் அந்த இளைஞர் அங்கேயே நின்றார்.
அதனால் எனக்கு மேலும் கோபம் அதிகரிக்க அங்கிருந்த கல்லை எடுத்து அடிக்க முற்பட்டேன். கல்லால் அடித்தால் என் மீது கிரைம் வழக்கு பதிவாகிவிடும் என, கல்லை கீழே போட்டு விட்டேன்.
பின்னர் எதற்கு வம்பு என நினைத்து வேகமாக புறப்பட்டு வீட்டிற்கு சென்று விட்டேன். என்னை பார்த்தால் அப்படி தவறான எண்ணத்தில் கூப்பிடும் அளவிலா இருக்கிறேன், என்றார்?
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com