ரேஸர் அஸ்வின் சுந்தர் விபத்துக்குள்ளான அதே இடத்தில் மற்றொரு விபத்து..! – திகில் தகவல்

Loading...
                                                        
சென்னையில் கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் விபத்துக்குள்ளான அதே இடத்தில் நேற்று இரவு மீண்டும் விபத்து ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, எம்.ஆர்.சி நகரில் உள்ள வேகத்தடையில் வண்டி ஏறியபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. எதிரே ஆட்டோ வந்ததால் விபத்தை தவிர்க்க, அவர் பிரேக் போட்டபோது விபத்து நிகழ்ந்தது.
இதில், கார்த்திக்கிற்கு காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரு நாட்களுக்கு முன்பு கார் பந்தய வீரர் அஸ்வின், அதே வேகத்தடையை கடந்தபோதுதான், கார் கட்டுப்பாட்டை இழந்து உயிரிழக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com