எம்ஜிஆரின் இதயத்தில் இடம்பிடித்த ஆர்.கே.நகர் : வள்ளலுக்கே கடன் கொடுத்த புட்டு கிழவி!

Loading...
                                                         
எம்.ஜி.ஆர்தான் தலை சிறந்த வள்ளல் என்று இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன்..! மணியன் சொல்கிறார் கேளுங்கள்.
ஆனால் அந்த வள்ளலுக்கும் வள்ளலாக ஒருவர்   அதுவும் ஒரு பெண் இருந்திருக்கிறார் என்பதை இன்றுதான் அறிந்து கொண்டேன்.
எம்.ஜி.ஆர். தனது ஆரம்ப காலத்தில் சென்னை யானைக்கவுனியில்தான் குடியிருந்தாராம். நண்பர்களைக் காண ஆர்.கே. நகருக்கும் சென்று வருவார். அது அவரது வாழ்வின் வறுமைக் காலம். அந்த வறுமைக் காலத்திலும் வாக்கிங் போவது அவரது காலை வழக்கம்.
 போகும் வழியில் ஒரு பாட்டி, புட்டு  விற்றுக் கொண்டிருப்பாராம்…!
ஒரு நாள் காலையில் வாக்கிங் போய்விட்டு அந்த பாட்டி அம்மாளிடம் புட்டு வாங்கச் சென்ற எம்.ஜி.ஆர். தன் கையில் இருந்த காசை எண்ணிப் பார்த்துவிட்டு..“ மறுநாள் வாங்கிக்கறேன்..” என்றாராம்.
“ஏன்..?” என்று பாட்டி கேட்டதும் , எம்.ஜி.ஆர். தயக்கத்துடன் சொன்னாராம்,“ பாட்டி.. நான் எனக்கு மட்டும் வாங்க வரவில்லை. என்னோடு இருக்கும் மூணு பேருக்கும் சேர்த்து வாங்க வேண்டும் என்றுதான் வந்தேன். ஆனால்..?”
“என்ன ஆனால்..?” என்று பாட்டி கேட்டாராம்.
“அவ்வளவு பேருக்கும் சேர்த்து வாங்கக் கூடிய அளவுக்கு என்னிடம் காசு இல்லை பாட்டி ” என்று உண்மையைச் சொல்லி விட்டாராம் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். முகத்தைப் பார்த்த பாட்டி என்ன நினைத்தாரோ…?
“பரவாயில்லே! நாளைக்கு வரும் போது காசு குடுப்பா…” என்று சொல்லி எல்லோருக்கும் சேர்த்து புட்டை பார்சல் செய்து கொடுத்தாராம் அந்தப் பாட்டியம்மா ..!
எம்.ஜி.ஆர். இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. பாட்டி கொடுத்த பார்சலை வாங்காமல் எம்.ஜி.ஆர். ஏதோ சிந்தித்துக் கொண்டிருக்க, சிரித்துக் கொண்டே பாட்டி கேட்டாராம்.
”என்னப்பா யோசிக்கிறே..?”
எம்.ஜி.ஆர். திடீர் என அந்தப் பாட்டியிடம், அவர் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத இந்தக் கேள்வியை கேட்டிருக்கிறார். “ஆமா…நாளைக்கு நான் காசு கொண்டு வராம உன்னை ஏமாத்திட்டா என்ன பண்ணுவே பாட்டி..?” .
பாட்டி பதட்டமில்லாமல் சொன்னாராம்….“காசு வந்தா வியாபாரத்துல சேரப் போவுது. வரலேன்னா உங்க மூணு பேரு பசியைத் தீர்த்த புண்ணியம் வருது. அது தருமக் கணக்குல சேர்ந்துடும்”
பாட்டியின் இந்தப் பதில், எம்.ஜி.ஆரின் மனதில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்..?
நிச்சயமாக அந்தப் பாதிப்புத்தான் அவர் மனதில் பல பண்புகளை பதிய வைத்திருக்கும்…!
சொன்னபடியே மறுநாள் தேடிச் சென்று அந்தப் பாட்டிக்கு கொடுக்க வேண்டிய காசைக் கொடுத்துவிட்டாராம் எம்.ஜி.ஆர். பல வருடங்கள் கழித்து எம்.ஜி.ஆர். முதலமைச்சரான பின், அந்தப் பாட்டி பற்றி விசாரித்து ஆர்.கே.நகருக்கு  தேடிச் சென்று உதவி செய்ததாக சில தகவல்கள் கூறுகின்றன.
இந்தப் பூமியிலே அந்தப் புட்டுப் பாட்டி எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பது எனக்குத் தெரியவில்லை..!
ஆனால் எம்.ஜி.ஆரின் இறுதி மூச்சுவரை அந்தப் புட்டு பாட்டி , எம்.ஜி.ஆரின் இதயத்தில் வாழ்ந்திருப்பாள்…! அதில் எனக்கு சந்தேகமே இல்லை
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com