காதின் சில பகுதிகளில் அழுத்தம் கொடுப்பதால், உடலினுள் நிகழும் அற்புதங்கள்!

Loading...
                                                        
உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் அக்குபிரஷர். இந்த சிகிச்சை முறையில், உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு குறிப்பிட்ட இடத்தில் அழுத்தம் கொடுத்து சரிசெய்யப்படும். சில நேரங்களில் கிளிப்புகளைப் பயன்படுத்தியும், உடலின் சில பகுதிகளில் அழுத்தம் கொடுக்கப்படும்.
இக்கட்டுரையில் காதுகளில் எவ்விடத்தில் அழுத்தம் கொடுத்தால், எந்த உறுப்புக்களில் உள்ள பிரச்சனைகள் குணமாகும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, நீங்களும் பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.
படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 1 ஆம் புள்ளியுள்ள பகுதியானது முதுகு மற்றும் தோள்பட்டையுடன் தொடர்புடையது. எனவே இவ்விடத்தில் துணி கிளிப் கொண்டு 1 நிமிடம் அழுத்தம் கொடுப்பதன் மூலம், முதுகு மற்றும் தோள்பட்டையில் உள்ள அழுத்தம் நீங்கி, நல்ல ரிலாக்ஸ் கிடைக்கும்.
படத்தில் கொடுக்கப்பட்டுள்ள 2 ஆம் புள்ளியில் துணி கிளிப் கொண்டு அழுத்தம் கொடுப்பதன் மூலம், உடலினுள் உள்ள வலி மற்றும் அசௌகரியம் நீங்கி, உடல் ரிலாக்ஸ் ஆகும்.
3 ஆம் புள்ளியானது மூட்டுகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. இவ்விடத்தில் கிளிப் பயன்படுத்தி அழுத்தம் கொடுப்பதன் மூலும், மூட்டுக்களில் உள்ள வலி மற்றும் பிடிப்புக்களில் இருந்து விடுபடலாம்.
படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 4 ஆம் புள்ளி சைனஸ் மற்றும் தொண்டையுடன் தொடர்பு கொண்டுள்ளது. இரவு நேரத்தில் மூக்கடைப்பால் தூக்கத்தை இழக்கும் போது மற்றும் சளியால் சைனஸ் சுரப்பியில் வீக்கம் இருக்கும் போது, இப்பகுதியில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் விடுபடலாம்.
5 ஆம் புள்ளியானது செரிமான மண்டலத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. இவ்விடத்தில் கிளிப் கொண்டு அழுத்தம் கொடுத்தால், செரிமான பிரச்சனைகளான வயிற்று வலி மற்றும் பிடிப்புகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 6 ஆம் புள்ளி தலை மற்றும் இதயத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. இவ்விடத்தில் அழுத்தம் கொடுக்கும் போது, ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலியில் இருந்து விடுபடலாம். மேலும் இப்பகுதியில் கொடுக்கப்படும் அழுத்தத்தால், இதய ஆரோக்கியமும் மேம்படும்.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com