என்னை படுக்கைக்கு அழைத்த இயக்குநரின் இன்றைய நிலை... பிரபல நடிகையின் ஓபன் டாக்

Loading...
                                                             


தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை லேகா வாஷிங்டன் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளவர் லேகா வாஷிங்டன். சென்னை பெண்ணான அவரின் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை.
நான் ஒரு நடிகை, கலைஞர் மற்றும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். என் நண்பர்களும், குடும்பத்தாரும் ஆதரவாக இருப்பதால் தான் என்னால் பல விஷயங்களை ஒரே நேரத்தில் செய்ய முடிகிறது.
ஒரு நடிகையாக பல பாரபட்சங்களை பார்த்துள்ளேன். ஆனால் அது எல்லாம் என்னை பாதிக்காமல் பார்த்துக் கொண்டுள்ளேன். எனக்கு பிடித்தபடி வாழ்கிறேன். அடுத்தவர்கள் நினைப்பதை பற்றி கவலை இல்லை.
ஒரு நடிகையாக இருப்பது எளிது அல்ல. ஒரு நடிகையாக நான் பல கருமங்களை பார்க்க வேண்டியுள்ளது. ஒரு சம்பவத்தை நான் எப்பொழுதுமே மறக்க மாட்டேன்.
தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் காரில் என்னை அழைத்துச் சென்றார். உன்னை என் படத்தில் நடிக்க வைக்கிறேன் பதிலுக்கு எனக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டார்.
அந்த இயக்குனர் கூறியது புரியாதது போன்று நடித்தேன். ஆனால் அவர் மீண்டும் மீண்டும் கேட்டார். உங்களுடன் படுக்கையை பகிர்வேன் என்று மட்டும் நினைக்க வேண்டாம் என்று பளிச்சென்று சொல்லிவிட்டேன்.
படுக்கைக்கு வர மாட்டேன் என்று நான் கூறியது அந்த இயக்குனருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் என்னை சமரசம் செய்யப் பார்த்தார். நான் முடியாது என்று பிடிவாதமாக இருந்துவிட்டேன்.
அந்த இயக்குனர் தனது பட ஹீரோயினுடன் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்ற இடத்தில் அளவுக்கு அதிகமாக வயாக்ரா எடுத்துக் கொண்டதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார் என்பது தெரிய வந்தது. அது தான் கர்மா என்றார் லேகா.

Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com