போராட்டம் மட்டுமல்ல பசியால் தவிக்கும் குழந்தைக்கு பால் கிடைக்கவும் உதவி செய்த சமூக வலைதளங்கள்!

Loading...
                                                               
ரயில் பயணத்தின் போது பசியால் அழுத குழந்தைக்கு பால் கிடைக்க உதவி செய்தன சமூக வலைதளங்கள்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, மக்களை இணைக்கும் பாலமாக அமைந்த சமூக வலைத்தளங்கள், போராட்டத்துக்கு மட்டுமல்லாமல் பசியால் கதறி அழுத குழந்தைக்கு பால் கிடைக்கவும் உதவி செய்துள்ளன.
குஜராத்திலிருந்து, தங்களுடைய 5 மாத குழந்தை கார்த்திகியுடன் ஒரு தம்பதியினர் திருநெல்வேலிக்கு ஹப்பா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தனர். அந்த தம்பதி குழந்தைக்காக பால் எடுத்து வந்த போதும் வெயிலின் தாக்கம் காரணமாக பால் திரிந்துவிட்டது.
ரயில் கேண்டினிலும் பால் இல்லாததால், குழந்தைக்கு பால் கொடுக்க முடியாமல் குழந்தை பசியால் அழ ஆரம்பித்தது. ஆனால் ரயில் அடுத்த ஸ்டேசனில் நிற்பதற்கு இன்னும் சில மணி நேரம் ஆகும் என்பதால் பெற்றோர் மிகுந்த வேதனை அடைந்தனர்.
இதை பார்த்த அவர்கள் அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண், அவரது நண்பர்களுக்கு இந்த தகவலை பரப்பி, குழந்தைக்கு பால் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதோடு கொங்கன் ரயில்வேக்கும் இதுகுறித்து டுவிட் செய்தார்.
இந்த டுவிட்டை பார்த்த ரயில்வேத்துறை அடுத்த சில நிமிடங்களில் ரீ டுவிட் செய்தது. ரயில் அடுத்து வரும் கோலாட் என்ற இடத்தில் நிற்கும் என்றும் அங்கு குழந்தைக்கு தேவையான பாலை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல் கோலாட் ரயில்வே ஸ்டேஷனுக்கு ரயில் வந்தவுடன், அங்கு குழந்தைக்கான பால் வழங்கப்பட்டது. அதை அருந்திய  குழந்தை மகிழ்ச்சியில் சிரித்தது.
சமூக வலைத்தளங்கள் மூலம் இதுபோன்ற நற்செயல் நடந்ததை நினைத்து பெருமை கொள்வதாக, டுவிட் செய்த பெண் தெரிவித்தார்.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com