ஹேர் டை உபயோகப்படுத்திய இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! உஷார் ரிப்போர்ட்

Loading...
                                                        

பிரித்தானியாவில் தலை முடிக்கு ஹேர் டை உபயோகப்படுத்திய இளம் பெண்ணுக்கு கடுமையான பக்க விளைவுகள் ஏற்ப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்தவர் Gemma Williams (24) இவர் அழகு நிலைய கலைஞராக வேலை செய்து வருகிறது.
இவரின் தலை முடியை நல்ல கருமை நிறமாக மாற்ற கடையிலிருந்து ஹேர் டை பாக்கெட்டை வாங்கி தலையில் பூசியுள்ளார்.
ஹேர் டை போட்ட 24 மணி நேரத்துக்குள் அதன் பக்கவிளைவுகள் Gemmaவை கடுமையாக தாக்கியது.
அவர் கழுத்து பகுதி முழுவதும் சிவப்பு நிறமாக வீங்கி விட்டது. அதனுடன் அவர் காதுகள் எரிய ஆரம்பித்தன.
மேலும் அவரால் கண்களை திறக்கவே முடியவில்லை.
உடனே அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிக்ச்சையளிக்கப்பட்டு மாத்திரைகள் கொடுக்கப்பட்டன.
வீட்டுக்கு வந்த Gemmaவுக்கு சில நாட்களில் மீண்டும் பிரச்சனை ஏற்ப்பட திரும்பவும் மருத்துவமனைக்கு சென்று இரண்டு வாரங்கள் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இது குறித்து Gemma கூறுகையில், நான் மருத்துவமனைக்கு செல்லாமலிருந்தால் விஷம் உடலில் பரவி நான் இறந்திருக்க கூடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இனி எக்காலத்திலும் ஹேர் டையை பயன்ப்படுத்த மாட்டேன் என பீதியுடன் அவர் கூறியுள்ளார். மேலும் ஹேர்டையில் கலக்கப்பட்ட சில ரசாயனங்களே இதற்கான காரணம் என கூறப்படுகிறது.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com