வாழ்நாளை எண்ணும் சிறுவன்! நாட்டையே உருக வைத்த கடைசி ஆசை! அட கடவுளே!

Loading...


போலந்து நாட்டை சேர்ந்தவர் பியோட்ர் க்வான்சி. இவரது மனைவி அக்னீஸ்கா. கடந்த 2009ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அந்த குழந்தைக்கு ஃபிலிப் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். சந்தோஷமாக போய் கொண்டிருந்த வாழ்க்கையில் இடி விழுந்தது. அக்னீஸ்காவை புற்றுநோய் தாக்கியது. க்வான்சியால் மனைவியை காப்பாற்ற முடியவில்லை. புற்றுநோய் அக்னீஸ்காவின் உயிரை குடித்தது.
அக்னீஸ்காவின் சொந்த ஊரான போலந்து நாட்டின்  ஒரு சிறிய கிராமத்தில் அவரது உடலை அடக்கம் செய்தார் க்வான்சி. தந்தையும், மகனும் தனியாக வாழ தொடங்கினர்.
இந்நிலையில் க்வான்சியால் மகனை தனியாக பார்த்து கொள்ள முடியவில்லை. மகனுக்கான இன்னொரு திருமணம் செய்தார் க்வான்சி. ஒரு குழந்தையும் பிறந்தது. மேலும் இரண்டு குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வந்தார்.
க்வான்சி வாழ்க்கை மெல்ல சகஜ நிலைமைக்கு  மாறி கொண்டிருந்தது. அப்போது தான் அடுத்த இடி அவர் தலையில் விழுந்தது. மகன் ஃபிலிப்புக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது.
மகனை பல்வேறு மருத்துவர்களிடம் காண்பித்து பரிசோதனை செய்தார் க்வான்சி. அப்போது ஃபிலிப்புக்கு ரத்த புற்றுநோய் தாக்கியிருப்பது தெரியவந்தது.
இதை கேட்டதும் க்வான்சி துடித்து போய்விட்டார். புற்றுநோய்க்கு மனைவியை பலிகொடுத்த நிலையில், மகனுக்கு புற்றுநோய் என்றதும் கதறி அழுதார் க்வான்சி.
இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு லண்டனில் உள்ள குழந்தைகள் புற்றுநோய் மையத்தில் சிகிச்சைக்காக மகனை சேர்த்தார் க்வான்சி. அங்கு சிகிச்சையில் சற்று தேறி வந்த ஃபிலிப் கடந்த செப்டம்பரில் உடல்நிலை மிகவும் மோசமானது.
ஃபிலிப்பில் மூக்கில் இருந்து ரத்தம் வழிய தொடங்கியது. கால்களில் ரண வலி ஏற்பட்டது. தாங்க முடியாத வேதனையில் அந்த சிறுவன் துடித்தான். மருத்துவர்களும் எவ்வளவோ சிகிச்சை அளித்தும் பலன் தரவில்லை.
மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். தற்போது வலிநிவாரண சிகிச்சை மட்டும் ஃபிலிப்புக்கு அளிக்கப்பட்டு வருகிறது. தன் வாழ்நாளை எண்ணிக் கொண்டு இருக்கிறான் அந்த சிறுவன்.
இந்நிலையில் ஃபிலிப் கடைசி ஆசையாக தன் தந்தையிடம் தான் இறந்தபிறகு தனது உடலை தாயின் கல்லறையிலேயே அடக்கம் செய்து விடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறான்.
இதற்கிடையே மனைவியின் சவப்பெட்டியை தோண்டி எடுத்து மகனின் ஆசையை நிறைவேற்ற க்வான்சிக்கு 6500 பவுண்டுகள் வரை தேவை என்ற தகவல் வலைத்தளங்களில் பரவியது.
இத்தகவலால் இங்கிலாந்து நாடே உருகிப் போனது. இதனால் தற்போது 35000 பவுண்டு வரை நிதி திரட்டப்பட்டிருக்கிறது. அந்த சிறுவனுக்காக இங்கிலாந்து நாடே கடவுளிடம் வேண்டி கொண்டிருக்கிறது.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com