நடுநோட்டில் கர்ப்பிணிக்கு திடீர் பிரசவ வலி.. பிரசவம் பார்த்த பிச்சைக்காரி.

Loading...
                                                           
கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் அருகே உள்ள சனா பஜார் பகுதியை சேர்ந்தவர் ராமண்ணா. விவசாயியான இவரது மனைவி எல்லம்மாள். தம்பதிக்கு ஏற்கனவே 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். ஆனாலும் பெண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் எல்லம்மாள் மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த எல்லம்மாளுக்கு ரத்த சோகை இருந்ததால் ராமண்ணா தனது மனைவியை ரெய்ச்சூரில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருந்தார். மருத்துவனையில் சிகிச்சை முடிந்து இருவரும் வீடு திரும்பி உள்ளனர்.
வீட்டிற்கு செல்வதற்காக பஸ்சில் இருந்து இறங்கிய உடனேயே எல்லம்மாளுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. நடு ரோட்டில் வலியால் துடித்து கொண்டிருந்தார். மேலும் அதிக ரத்த போக்கு ஏற்பட்டது. என்ன செய்வது என தெரியாமல் ராமண்ணாவும் தவித்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த இடத்தில் பிச்சை எடுத்து கொண்டிருந்த 60 வயது மதிக்கதக்க பெண்மணி ஒருவர் எல்லம்மாளுக்கு எல்லாவிதமாக உதவியும் செய்தார். இதனை பார்த்த மற்ற பெண்களும் உதவியதால் எல்லம்மாளுக்கு அதே இடத்தில் பிரசவம் நடந்தது. அழகான பெண் குழந்தை பிறந்தது.
இதனை அடுத்து தாயும், சேயும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் சிறிது நேரத்திற்கு முன்னர் எல்லம்மாளுக்கு பிரசவம் பார்த்த பிச்சைக்கார பெண்மணியை தேடிய போது அவர் கிடைக்கவில்லை. அவர் குறித்த விவரங்களும் யாருக்கும் தெரியவில்லை. வலியால் துடித்தபோது தெய்வம் போல வந்து பிரசவத்திற்கு உதவிய பிச்சைக்கார பெண்மணியை நன்றி சொல்வதற்காக தேடி வருகிறார் விவசாயி ராமண்ணா.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com