தமிழ்மொழி நிச்சயம் சோறு போடும்! மலேஷியா காவல்துறை அதிகாரி பிரகாஷ் கிருஷ்ணன்!

Loading...
                                                                       

தமிழ்மொழி சோறு போடுமா எனக் கேட்பவர் களுக்குத் தமிழ்மொழியால் தான் காவல்துறை அதிகாரி யாகும் வாய்ப்பு கிடைத்ததாக பெருமையோடு  கூறுகின்றார் காவல்துறை அதிகாரியான இன்ஸ்பெக்டர் பிரகாஷ் கிருஷ்ணன்.
பகாங், கெமாயான் பகுதியில் தெம்பாங்காவ் பெல்டா நிலக்குடியேற்றவாசியான கிருஷ்ணன் -  கன்னியம்மா கோவிந்தசாமி தம்பதியரின்  நான்கு பிள்ளைகளில் கடைக்குட்டியாகப் பிறந்த ஒரே ஆண் பிள்ளையான பிரகாஷ் கிருஷ்ணன் தமிழ்ப்பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்ற தமிழுணர்வோடு 30 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருந்த கெட்டீஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு சிரத்தையோடு அனுப்பி வைத்த பெற்றோர்களுக்கு இன்று தனது உயர்வால் நன்றிகளைச் சமர்ப்பித்திருக்கின்றார்.
படிவம் 1 முதல் 5 வரை தெமாங்காவ் இடைநிலைப்பள்ளியில் கற்ற பின்னர் படிவம் 6க்கான உயர்கல்வியை டத்தோ மன்சோர் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றதை தனது வாழ்வின் திருப்புமுனை யாக கருதுகின்றார் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் கிருஷ்ணன்.
எஸ்டிபிஎம் தேர்வில் தமிழ்மொழிப் பாடத்தினைத் தேர்வுப் பாடமாக எடுத்ததன் வழி தேர்வு முடிவுகளுக்குப் பிறகு காவல்துறையில் பணியாற்ற விண்ணப்பம் செய்தபோது தமிழ்மொழியைக் கட்டாயப் பாடமாக கேட் டிருந்ததால் தனக்கு காவல்துறையில் பயிற்சியினை மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்ததாக மகிழ்ச்சியோடு கூறினார்.
எஸ்டிபிஎம் தேர்வுகள் மிகவும் கடினமானவை எனும் சிந்தனையோடு தூரப் போட்டுவிட்டு நம்பிக்கையோடும் தைரியத்தோடும் படிவம் 6இல் உயர்கல்வியை இந்திய மாணவர்கள் தொடர வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கின்றார் பிரகாஷ் கிருஷ்ணன்.
எஸ்டிபிஎம் தேர்வினை எழுதியிருந்ததன் மூலம் வட மலேசியப் பல்கலைக்கழகத்தில் (UUM) பொது நிர் வாகத்துறையில் (Public Administration) இளங்கலைப் பட்டப்படிப்பினை முடித்திருப்பதோடு தற்போது குற்ற வியல் சீர்திருத்த அறிவியல் துறையில் (Master of Science Correctional) முதுகலை பட்டப்படிப்பையும் அதே பல்கலைக்கழகத்தில் படித்து பெற்றோர்களுக்கு மிகச் சிறந்த பரிசினையும் தந்துள்ளார் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் கிருஷ்ணன்.
எஸ்பிஎம் தேர்வின் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் இந்திய மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் 2017ஆம் ஆண்டிற்கான படிவம் 6க்காக வழங்கப்படும் வாய்ப்புகளை உதறித்தள்ளிவிட வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றார். 
எஸ்டிபிஎம் தேர்வில் தமிழ்மொழிப் பாடத்தின் வழி அரசாங்கப் பல்கலைக்கழக வாய்ப்புகள்  பிரகாசமாக இருப்பதால் சிறந்த எதிர்காலம் நிச்சயமாக இருப்பதாகவும் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார்.
source:www.nanban2u.com
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com