பயணிகளின் உயிரை காப்பாற்றி.. தன்னுடைய உயிரை விட்ட டிரைவர்

Loading...
                                                      
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து துமகூரு மாவட்டம் சிரா என்ற இடத்தை நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் நாகராஜ் (50) என்பவர் ஓட்டி சென்றார்.
பஸ் சிரா தாலுகா லக்கனஹள்ளி என்ற இடத்தில் செல்லும்போது பஸ் டிரைவர் நாகராஜூக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் செய்வறியாது திகைத்த டிரைவர் பஸ்சை சாலை ஓரத்தில் பாதுகாப்பாக பிரேக் போட்டு நிறுத்தி விட்டு ஸ்டீரியங் மீது படுத்தபடி உயிரிழந்தார். இதனை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பஸ்சில் இருந்த 50க்கும் மேற்பட்ட பயணிகளை காப்பாற்றி உயிரை விட்ட டிரைவரின் தியாகம் பொதுமக்களை கண்கலங்க வைத்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com