ஹோட்டல் டேபிள் கிளீனர் பையனிடம்.. ஒரு தினக்கூலி செய்த செயல்..! கண்ணீர் வரவழைத்த சம்பவம்

Loading...


நான் ஒரு தனியார் நிறுவனத்தில் தினக் கூலியாக பணிபுரிகிறேன். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை வேலை முடித்து வர நடு இரவு ஆகிவிட்டது.
பசி மிகுதியாக இருந்ததால், போகும் வழியில் ஏதேனும் உணவகம் இருக்கிறதா? என்று பார்த்துக் கொண்டே வந்தேன். இரண்டு உணவகங்களில் எல்லாம் முடிந்துவிட்டது என்று கூறிவிட்டார்கள்.
சரி, வீட்டிற்கே சென்று விடலாம் என்று நினைத்து வந்து கொண்டிருந்த பொழுது ஒரு ஹோட்டல் தென்பட்டது.
இந்த ஹோட்டலிலாவது உணவு இருக்க வேண்டுமென்று கடவுளை வேண்டிக் கொண்டு உள்ளே சென்றேன்.
அங்கு, ஒரு சின்னபையன் டேபிள் துடைத்துக் கொண்டிருந்தான். அவனிடம் சாப்பிட என்ன உள்ளது என்று கேட்டேன்.
அவன், வேண்டா வெறுப்பாக தோசையை தவிர வேற எதும் இல்லை என்று கூறினான்.
நானும், சரி தோசை கொண்டு வா..என்று கூறினேன்.
உடனே அந்த சிறுவன், மாஸ்டர் ஒரு தோசை என்று கூறிவிட்டு மீண்டும் டேபிள் துடைக்கச் சென்று விட்டான்.
எனக்கோ, உடல் அசதி, சோம்பல் முறித்தேன். ஆனால், சின்ன பையன் இந்த இரவில் துடைத்துக் கொண்டிருக்கிறான். என்று என்னும் பொழுது பாவமாக இருந்தது. அவனை அழைத்து சாப்பிட்டியா? என்று கேட்டேன். அவனும் ஒரு வகையாக என்னை பார்த்துவிட்டு இல்லை என தலையாட்டினான்.
பின்பு, அவனை இங்கே வா என அழைத்து முந்திரி தோசை இருக்கா? என்று கேட்டேன். வெறுப்புடன் வந்தவன், இத முதல்லே சொல்ல வேண்டியதுதானே என்று கூறிவிட்டு மாஸ்டர் ..... என்று இழுத்தவனிடம் ரெண்டு சொல்லு என்றேன்.
உடனே, என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டே இரண்டு முந்திரி தோசை என்று கூறினான்.
நான், அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவனோ அவனுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
பின்பு, தோசை ரெடி என மாஸ்டர் கூறவே தோசையை எடுத்து வந்தான். இரண்டு தோசைக் கொண்டு வந்தவனிடம், ஒரு தோசை எனக்கு வைத்துவிட்டு, மற்றொரு தோசையை நீ சாப்பிடு என்று கூறினேன்.
அவன், பயந்து கொண்டே, ஹோட்டல் கேசியரைப் பார்த்தான். உடனே நான் அவனை அணைத்துக் கொண்டு கேசியரிடம், இது என் கண்ணனுக்கு என்றேன். அவரும் சம்மதித்தார்.
அப்பொழுது, சிறுவன் வேக வேகமாக கையை கழுவி சாப்பிட ஆரம்பித்தான். அவன் மனதில் அவ்வளவு சந்தோஷம் இருந்தது தெரிந்தது.
சாப்பிட்டுக் கொண்டே, வேற என்ன சார் வேணும், என்று கேட்டான். நானும் உனக்கு ஒரு முத்தம் கொடுக்கனும் டா! கொடுக்கட்டுமா? என்றேன்.
மெல்ல புன்னகைத்த அவனை அணைத்து அழுக்கு கன்னத்தில் முத்தமிட்டேன்.
பின்பு, போயிட்டு வரட்டுமா? என்றேன். சந்தோசமாக சரி என்று தலையசைத்தான்.
காசை கொடுத்து வெளியே வந்தபோது மனசு சிலாகித்தது. தினக கூலி எனக்கு இதாவது செய்ய முடிந்ததே என்று......

Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com