3 கோடி பரிசு பெற்ற 10ம் வகுப்பு மாணவர்களின் பலே ஐடியா !

Loading...
                                                      
10ம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்களின், புதுவிதமான ஐடியாவால் அவர்களின் தொடக்க தொழிலுக்கு ரூ.3 கோடி நிதி கிடைத்துள்ளது.
படித்து விட்டு பலரும் தொழிலை தொடங்க ஐடியா ஏதேனும் கிடைக்காதா என சுற்றி வருகின்றனர். அப்படியிருக்க, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று பேர் தங்களின் புதுவிதமான ஐடியாவை செயல்படுத்தியதன் விளைவாக அவர்களது ஐடியாவை , தொழிலாக மாற்ற ரூ.3 கோடி நிதி கிடைத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின், ஜெய்ப்பூர் பகுதியில் இயங்கும் நீரஜ் மோடி பள்ளியை சேர்ந்த மூன்று மாணவர்கள் எந்த ஒரு ரசாயனம் அல்லது நறுமணத்தை சேர்க்காமல் தண்ணீரின் சுவையை மாற்றும் யோசனையை கண்டுப்பிடித்துள்ளனர்.
இந்த யோசனைக்கு பல உணவகங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இதன் காரணமாக இவர்களின் யோசனையை தொழிலாக மாற்ற காப்புரிமை வாங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு நடந்த தொழில் முனைவோர் கூட்டத்தில் இவர்களின் யோசனையை அனைவர் முன்னிலையிலும் எடுத்துரைத்தனர். அதோடு இதற்கான மாதிரியையும் சமர்ப்பித்தனர். இவர்களின் இந்த யோசனை குறித்து ஜம்மு காஷ்மீர், டெல்லி போன்ற மாநிலங்களிலும் கேட்டறிந்தனர்.
மேலும் , தண்ணீரை சுவையாக்கும் இவர்களின் யோசனை மக்களின் ஆரோக்கியத்திற்கு எந்த வித தீங்கும் ஏற்படாது என்பதற்கு உணவுத்துறையிடம் சான்றிதழும் பெற்றுள்ளனர்.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com