கருவேலத்துக்கு வந்த வாழ்வு... செடியை பிடுங்கினால் ஒரு செடிக்கு ரூ.2... அசத்தும் ஆண்டிப்பட்டிவாசிகள்

Loading...
                                                         
சீமை கருவேல செடிகளை பிடுங்கி குறிப்பிட்ட விலாசத்தில் கொண்டு வந்து கொடுத்தால் ஒரு செடிக்கு ரூ.2 வீதம் சன்மானமாக அளிக்கப்படும் என்று சமூகவலைதளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.
சீமை கருவேல மரங்களின் வேர்களால் நிலத்தின் நீர்மட்டம் வேகமாக உறிஞ்சப்படுகிறது. இதனால் தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் சீமை கருவேல மரங்களை அழிக்கும் பணியில் 150 நாள்கள் வேலை திட்ட பயனாளிகளை ஈடுபடுத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரி வருகின்றன.
குற்றம் சாட்டப்பட்டு ஜாமீனில் வெளிவரும் நபர்கள் 20 நாட்களுக்குள் 100 சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று அரியலூர் நீதிமன்ற நீதிபதி கடந்த 15-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார்.
 அந்த வகையில் சீமை கருவேலஞ்செடிகளை வேருடன் பிடுங்கி குறிப்பிட்ட விலாசத்தில் கொண்டு வந்து கொடுத்தால் ஒரு செடிக்கு ரூ.2 வீதம் வழங்கப்படும் என்று ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் நோட்டீஸ் அடித்துள்ளார். அதில் அவர் தன்னை வழக்கறிஞர் என்றும், லஞ்சம் கொடாதோர் சங்கம் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்த ஆஃபர் நாளை முதல் தொடங்குவதாகவும், இதை நழுவவிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com