இவர் வாழ்ந்தது 100 அல்ல.. 200 அல்ல.. அப்பப்பா 256 வருடம்.. நம்பினால் நம்புங்கள்..

Loading...
                                                           
மனிதனுக்கு சராசரியாக ஆயுள் 60 ஆண்டு என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இன்னும் சிலர் 80 வருடம் வரை வாழ்வதாக கூறுவார்கள். ஆனால் சீனாவில் ஒருவர் 100 அல்ல.. 200 அல்ல மொத்தம் 256 வருடம் ஒருவர் வாழ்ந்துள்ளார்.
அவரது பெயர் லீ சிங் யூன். இவர் குறித்து 1993ம் ஆண்டு டைம்ஸ் இதழில் கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது.  அதில், லீ சிங் 1827ல் 150வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். அப்போதைய சீன அரசும் கூட லீ சிங்குக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தது. அதன்பிறகு 1877ல் 200ம் பிறந்த நாளை கொண்டாடி உள்ளதாக கூறப்படுகிறது.
இவர் சிறுவயது முதலே மூலிகைகளை பறித்து அதனை ஊர் ஊரா கொண்டு சேர்க்கும் பணியை செய்து வந்தார். இதற்காக இவர் எங்கு சென்றாலும் கால்நடையாகவே சென்று வந்துள்ளார். மேலும் 40 வருடம் தொடர்ச்சியாக சைவம் மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார். அசைவ உணவு வகைகளை தொடவே இல்லை.
1749ல் இவர் 71 வயதில் சீனா படையில் மார்ஷியல் ஆர்ட் பயிற்சியாளராக சேர்ந்தார். இவர் 23 முறை திருமணம் செய்து கொண்டுள்ளார். 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்தனர்.
இவர் நீண்ட காலம் உயிர் வாழ கூறும் அறிவுரை என்னவென்றால் ஆமையை போல உட்கார்ந்து இருப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். புறாவை போல நடக்க பழகி கொள்ளுங்கள். நாயை போல தூங்குங்கள். நான் எதையும் சாதித்தது போல நினைக்கவில்லை. இவ்வளவு வருடம் வாழ்ந்தது சந்தோஷத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com