ராக்கெட் வச்சி நாக்கு வழிக்கவா: நதிகளை இணைக்க சொல்: பின்னால் வாரேன்:கமல்

Loading...
                                                  
கமல் இப்போது காதல்இளவரசன் அல்ல. கோபத்தின் இளவரசன் ஆகி விட்டார். அவரது டுவிட்டர் இப்போது ஒரு போர் மைதானம் ஆகி விட்டது.
தினமும் ஏதாவது ஒரு பரபரப்பு செய்தியை கொளுத்தி விடுகிறார். குறிப்பாக மாணவர்களுக்கு வேகம் உண்டாக்கும் வகையில் அவரது பதிவுகள் அமைகிறது.
நாக்கு வளிப்பதற்கா விண்ணில் ஏவும் ராக்கெட்? நீர் இணைத்தலே நீவிர் செயத்தகு ஆற்றல்..என்கிறார். வழக்கம் போலவே நாலு முறை படித்து அர்த்தம் தெரிந்து உங்களுக்கு எளிமைப் படுத்தி தருகிறோம். இதே கருத்தை சிவகுமாரும் சொல்லி இருக்கிறார்.
நதிகளை இணைத்து தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அரசுகள் முன்வர வேண்டும். தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்காமல் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்டு என்ன புண்ணியம் என்று நடிகர் சிவக்குமார் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் குடிக்க தண்ணீர் இல்லாமல் ஜனங்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். குடிப்பதற்கு மட்டுமில்லாமல், விவசாயத்துக்கே தண்ணீர் இல்லாததால் நிறைய பேர் கூலிக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி. நமக்கு நீராதாரம் வேண்டும். ஆனால், நடக்கக்கூடியது என்ன?
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com