மார்ச் 1 முதல் புதுப்பொலிவுடன் ‘‘இளநீர், கள்’’ மாணவர்கள் புரட்சி எதிரொலி! தமிழன்டா!

Loading...
                                                     
தமிழ்நாட்டில் வரும் மார்ச் 1 முதல், பாட்டிலில் அடைக்கப்பட்ட இளநீர், நீரா என்ற புளிக்காத கள் ஆகியவற்றை சென்னையில் விற்பனை செய்ய போவதாக தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.
தமிழத்தில் நடந்த ஜல்லிக்கட்டு புரட்சியின் போது மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வெளிநாட்டு குளிர்பானங்களை தடை செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
மாணவர்கள் புரட்சியின் எதிரொலி காரணமாக தற்போது தமிழகத்தில் வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனை சரிய தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
அதே வேளையில், உள்நாட்டு இயற்கை பானங்களான இளநீர், மோர், கள், பதநீர் ஆகியவை விற்பனை அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது இளநீர், பதநீர் போன்ற பானங்கள் புதுப்பொலிவு பெற்று வாடிக்கையாளர்களுக்கு வசதியாக பாட்டில்களில் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் வரும் மார்ச் 1 முதல் இளநீர், நீரா எனும் புளிக்காத கள் போன்றவையும் பாட்டில்களில் விற்பனைக்க வர இருப்பதாக தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தமிழகத்தில் மட்டுமே கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கள் என்பது போதை பொருள் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் பன்னாட்டு பானங்களுக்கு பதிலாக நமது தமிழ்நாட்டு பானங்கள் உலகம் முழுவதிலும் சந்தைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Loading...
Share:

1 comment:

  1. அது ஒன்னுலதான் கலப்படம் இல்லாம இருக்கு......அது பிடிக்கலையா ஒங்கலுக்கு

    ReplyDelete

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com