‘‘மாணவர்களை கைது செய்யக்கூடாது’’ உயர் நீதிமன்றம் அதிரடி

Loading...
                                                        
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மாநிலம் முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து, அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தும் மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து, போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக போலீசார் வெளியேற்றினர். மேலும், பல்வேறு இடங்களில் தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர்.
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் சில பேரை கைது செய்தனர். போராட்டத்தில் கைதானவர்களுக்கு முன் ஜாமீன் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, வீடியோ ஆதாரங்களை வைத்து பலரை போலீஸ் கைது செய்து வருகிறது. அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல் காவல் நிலையத்தில் வைத்து தாக்குகின்றனர்.
வெளியூரிலிருந்து வந்த பல மாணவர்களின் செல்போன், இருசக்கர வாகனம் போன்ற உடமைகளை பறிமுதல் செய்து போலீசார் மிரட்டி வருகின்றனர் என வழக்கறிஞர் வாதிட்டார்.
இதன்பின், சமூக விரோதிகளால் தான் போராட்டத்தில் வன்முறை நிகழ்ந்ததாக கருத்து தெரிவித்த நீதிபதி, குற்ற பின்னணி இல்லாதவர்களை ஆதாரம் இல்லாமல் போலீஸ் கைது செய்யக்கூடாது என தீர்ப்பளித்தார்.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com