குடிமகன்களின் குபீர் ஐடியா, ஊத்திக்கிச்சுடா சாமி!

Loading...
                                                           
மகாராஷ்டிர மாநிலம் மும்பை பகுதியில் ஒரு மதுபானக்கடையில் ரியல் எஸ்டேட் ஏஜெண்ட்கள் இருவர் பீர் வாங்கியிருக்கிறார்கள். அவர்கள் வாங்கிய பீருக்கு 2000 ரூபாய் நோட்டு கொடுத்திருக்கிறார்கள்.
கடையில் பணிபுரியும் ஊழியரும், அந்த 2000 ரூபாய் நோட்டை வாங்கியிருக்கிறார். நோட்டை வாங்கியவுடன் இருவரும் பதற்றத்துடன் காணப்பட்டிருக்கிறார்கள்.
இதனால் சந்தேகமடைந்த ஊழியர் அவர்களுக்கு தெரியாமல் போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்ததில் ரூ.2000 நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
ஏற்கனவே இருவரும் கூட்டாகச் சேர்ந்து போலி ரூபாய் நோட்டுக்கள் அச்சடித்து, புழக்கத்தில் விட்டதும் தெரிய வந்துள்ளது.
அவர்கள் நடத்தி வந்த ஏஜென்சியில் சோதனை செய்த போது, ஸ்கேன்னர், பிரிண்டர் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். மேலும் 32 போலி ரூ.2000 நோட்டுக்களை கைப்பற்றினர்.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com