முதல்வர் ஜெவின் கையால் விருது வாங்கிய நீச்சல் வீரா்! அடித்து, இழுத்து சென்று சிறையில் தள்ளி போலீஸ்!

Loading...
                                                 
மெரினா போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு போலீஸ் வன்முறையை கையில் எடுத்த்து.
திடீரென மின்ரயிலின்  போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. வேளச்சேரி ரயில் நிலையத்தில் டி.டி.ஆர். ஆகப்  பணியாற்றும் மாட்டாங்குப்பத்தைச் சேர்ந்த பிரேமானந்தன், இவர் பிரபல நீச்சல் வீர்ர். ரயில்வேயில் டி.டி.ஆராக பணியாற்றி வருகிறார்.
ரயில்கள் நிறுத்தப்பட்டதை அடுத்து அதிகாரிகள் வீட்டுக்குச் செல்லும்படி சொல்ல, வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்.
அப்போது அவருக்கு நடந்ததை நேரில் பார்த்த அவரின் தாய், கண்ணீருடன் விவரிக்கிறார்.
“போலீஸ்காரங்க கும்பலா எங்க ஏரியாக்குள்ள வந்தாங்க. தெருவில இருந்த வண்டிய எல்லாம் ஒடச் சுட்டுக்கிட்டே வந்தாங்க.
அப்போதான் என்னோட பையன் வீட்டுக்கு வந்தான். வண்டிய போலீஸ்காரங்க அடிக்கப் போறாங்கனு தள்ளிப்போய் நிறுத்தினான்.
அவன அங்குவந்த போலீஸ்காரங்க முரட்டுத்தனமா அடிச்சாங்க. தீவிரவாதி, சமூகவிரோதின்னு சொல்லி அடிச்சாங்க.
அவனோட சின்ன வயசுல இருந்து இந்தியாவுக்காகவும் தமிழ் நாட்டுக்காகவும் நீச்சல் போட்டியில விளையாடி பதக்கம் வாங்கித் தந்திருக்கான்.
அவன் சமூக விரோதியா? முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாகிட்ட வாழ்த்து வாங்கிருக்கான். அவன் தீவிரவாதியா?
நல்லா விளையாடிய அவனுக்கு ரயில்வேயில வேலை குடுத்தாங்க. அங்கயும் போயி நிறைய விருது வாங்கியிருக்கான்.
அரசு வேலையில இருக்கற அவனை இந்த போலீஸ் அடிச்சு இழுத்துட்டுப் போயிருக்கு” என்கிறார்.
போலீஸ் அன்று கண்ணில் கண்டவர்கள் அனைவரையும் வன்முறையாளராக அடித்து துன்புறுத்தியதையே காட்டுகிறது.
Loading...
Share:

1 comment:

  1. பழி ஓரிடம் பாவம் ஓரிடம்

    ReplyDelete

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com