மாணவர்கள், பொதுமக்களை நம்பித்தான் பெப்சி, கோக் கம்பெனிகளை பகைத்து கொள்கிறேன்.. விக்ரமராசா வேண்டுகோள்

Loading...
                                                   
மார்ச் 1ம் தேதி முதல் பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு வணிகர் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. இது குறித்து தமிழ்நாடு வணிகர் கூட்டமைப்பின் சார்பில் விக்ரமராசா வேண்டுகோள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
* மார்ச் 1 லிருந்து கோக கோலா பெப்சி போன்ற குளிர் பானங்கள் மற்றும் அதன் உப தயாரிப்புகள் தடை செய்வதாக அறிவிப்பு
* பிப்ரவரி 1 முதல் அதற்கான துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்படும்
* MNC கம்பெனிகளின் உணவுகளான கே.எப்.சி, மிக் டொணால்டு போன்றவற்றை உண்ண வேண்டாம்
என வேண்டுகோள்
* தொடர்பில் இல்லாத வணிகர்களுக்கும் கடையை நம்பி மட்டுமே பிழைக்கும் ஏழை கடைகாரர்களுக்கும் இத்தகவலை வாய்வழியாக தெரிவிக்குமாறு வேண்டுகோள்.
* இந்த முயற்சி பலமுறை தோல்வி அடைந்து மாணவர்கள் இளைஞர்கள் கையில் எடுத்து போராடியதன் காரணமாகவும் பல மாணவ அமைப்புகள் விடுத்த தொடர் கோரிக்கை காரணமாவும் மீண்டும் இம்முயற்சியை கையில் எடுத்துள்ளோம்.
* வணிக பிரதிநிதிகள் அனைவரும் கூடி இம்முடிவை அமைப்பு சட்டரீதியாக முடிவு இறுதிப்படுத்தப்பட்டது.
* மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க எங்களது முடிவிற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
* மாணவர்களையும் மக்களையும் நம்பி விழிசி கம்பெனிகளை பகைத்து இம்முடிவை எடுத்துள்ளோம்.
* இதன்மூலம் பல விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். விவசாய நிலங்கள் பேணப்படும். வறட்சியின் பிடி தளரும். விலைவாசி கட்டுக்குள் வரும்.
* ஊக்கம் தந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.
*இவண்:
விக்கிரம ராசா
தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பு.
Loading...
Share:

1 comment:

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com