அனைத்து மாவட்ட தலைநகரங்களில், பாஸ்போர்ட் அலுவலகங்கள்..! மத்திய அரசு அதிரடி

Loading...
                                                 
ஒரு காலகட்டத்தில் பாஸ்போர்ட் அலுவலகமானது தமிழ்நாட்டில் பெரிய மாநகராட்சிகளில் மட்டுமே செயல்பட்டுக் கொண்டு இருந்தது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் எந்த ஒரு நபராக இருந்தாலும் பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் என்றால் சம்மந்தபட்ட நபர் சென்னை வரவேண்டிய சு ழல் இருந்தது.
பிறகு பொது மக்களின் வசதிக்காக சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் பாஸ்போர்ட் அலுவலகங்கள் திறக்கப்பட்டன.
தற்போது மேலும் இவ்வசதியை பொதுமக்கள் அனைவரும் பெறும் வகையில் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான குஜராத்தில், தாகோட் என்ற நகரில் அஞ்சல் நிலையத்தில் பாஸ்போர்ட் அலுவலகம் திறந்து வைத்த வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் அவர்கள் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் வெளியுறவுத் துறை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால் புதிதாக பாஸ்போர்ட் எடுக்க இருப்பவர்களும், பழைய பாஸ்போர்ட்டை புதுப்பிக்க இருப்பவர்களுக்கும் மிகவும் எளிமையானதாகவும், பயனுள்ளதாவும் இருக்கும்.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com