ராசிபுரத்தில் மஞ்சுவிரட்டு 300 காளைகள் பங்கேற்பு! மாணவர்களுக்கு முதல் மரியாதை

Loading...
                                                   
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு இந்த விளையாட்டு தமிழகத்தில் மதுரை அலங்காநல்லூர் உட்பட சில ஊர்களில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. சில மாவட்டங்களில் மஞ்சுவிரட்டு என்ற பெயரில் நடந்து வந்தது.
ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்ததை அடுத்து கடந்த மூன்று ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு மாணவர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தை கையில் எடுத்து வெற்றி கண்டனர்.
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம், சட்டபையில் நிரந்தரசட்டம் ஏற்றப்பட்டது.
அதை தொடர்ந்து தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு, மாநிலம் முழுவதும் ஊர் ஊருக்கு நடத்தப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முள்ளுகுறிச்சி இதுவரை ஜல்லிக்கட்டு நடந்தது இல்லை, முதன் முறையாக மஞ்சுவிரட்டு என்ற பெயரில் இன்று நடத்தப்பட்டது இதற்கு ஊரே விழா கோலம் பூண்டுள்ளது. மஞ்சு விரட்டில் 300 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. துள்ளிவந்த காளைகளை இளைஞர்கள் போட்டி போட்டு விரட்டிப்பிடித்தனர்.
விழாவில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு முதல் மரியாதை செய்யப்பட்டது.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com