ஜல்லிக்கட்டு போராட்டம்: 300 பொறுக்கிகள் கைது, 6 அமைப்புகள் தடை : சுப்பிரமணியசுவாமி தகவல்

Loading...
                                                     
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களில் இதுவரை 300 பொறுக்கிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பா.ஜ. ராஜ்யசபா எம்.பி.யான சுப்பிரமணிய சுவாமி குதர்க்கமாக  கூறியுள்ளார்.
ஏற்கனவே ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சுப்பிரமணிய சுவாமி, போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை பொறுக்கிகள் என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் எனக்கு தெரிந்த வட்டார தகவல்கள்படி சிசிடிவி காட்சிகளை கொண்டு 300 பொறுக்கிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தன்னுடைய ட்வீட் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது பற்றி தமிழக அரசு எந்த பதிலும் கூறாத நிலையில் சுப்பிரமணிய சுவாமி 300 பேர் கைது என கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
ஆரம்பித்தில் இருந்தே தமிழர்களை பொறுக்கி என்று ஏளனமாக பேசிவரும் சுப்பிரமணிய சுவாமிக்கு வலைத்தளங்களில் மாணவர்கள் தக்க பதிலடி கொடுத்து வருவது தெரிந்ததே.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com