விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ. 2000 பரிசு! விசாரணை இல்லை! கெஜ்ரிவால் அதிரடி!

Loading...
                                                           
அதிரடிக்கு பெயர் போனவர் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால். மத்திய அரசு டெல்லிக்கு குறைவான அதிகாரமே வழங்கியுள்ளதால், அவரால் முழு சுதந்திரத்துடன் செயல்பட முடியவில்லை.
அதே நேரம் தன்னால் முயன்ற வரை மக்கள் நலத் திட்டங்களை அதிரடியாக நிறைவேற்றி வருகிறார். இந்நிலையில் டெல்லியில் அதிகரித்து வரும் விபத்துக்கள் மற்றும் காற்று மாசுபாட்டை தடுக்க ஆட் ஈவன் பார்முலா உள்ளிட்ட  அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இந்நிலையில்  தற்போது விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால், காப்பாற்றியவருக்கு ரூ. 2ஆயிரம் பரிசு வழங்கப்படும் என டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றால், அவர்களை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் வறுத்தெடுத்து விடுவார்கள். டெல்லியில் இனி அதுபோல் இருக்காது என்றும் மணிஷ் சிசோடியா விளக்கம் அளித்துள்ளார்.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com