நடிகர் அஜித்குமார் சென்னை திரும்பாததன் காரணம் இதுதான்

Loading...

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் அஜித்குமார், பல்வேறு இன்னல்களை கடந்து சாதனை புரிந்த உயர்ந்த தலைவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மாண்புமிகு டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் மறைவால் வாடும் என் சக தமிழ் நாட்டு மக்களுக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
பல்வேறு இன்னல்களை கடந்து சாதனை புரிந்த உயர்ந்த தலைவர் அவர். அவர் மீண்டும் ஆரோக்கியத்துடன் வர வேண்டும் என்று நாம் பிரார்த்தித்து கொண்டிருக்கும் வேளையில் அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி என்னை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரது பிரிவால் வாடும் எனக்கும், எண்ணற்ற என் சக தமிழக மக்களுக்கும் இந்த பிரிவை தாங்கும் வல்லமையை தர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், தல 57 படத்திற்காக பல்கேரியாவில் முகாமிட்டுள்ள நடிகர் அஜித்குமார். அங்கு பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக விமான சேவை இன்றி நாடு திரும்ப முடியாத சூழழில் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com