நீங்கள் உயிர் விடும் நாள் தெரியுமா? தெரிவிக்கிறது சிவபுராணம்! தைரியமானவர்கள் மட்டும் படிங்க!!

Loading...
                                                           
சொர்க்கம் மற்றும் நரகம் என்று இருந்தால், மனிதனுக்கு மரணம் என்பதும் இருக்கத்தான் செய்யும். இது தான் இயற்கையின் நியதி. பண்டைகால நூல்களில் ஒன்றான சிவபுராணத்தில் ஒரு மனிதனுக்கு மரணம் நிகழ போகிறதென்றால், சில அறிகுறிகள் தென்படும் என்று சொல்லியுள்ளது.
அந்த அறிகுறிகள் நம்முடைய உடலில் இருந்தே தொடங்குவதாகவும் சிவபுராணம் கூறியுள்ளது. அதாவது, முக்கிய உடலுறுப்புகளான வாய், காது மற்றும் கண் செயலிழக்க ஆரம்பித்து விடுமாம். அதன்பிறகு, அடுத்த ஆறு மாதங்களில் மரணம் ஏற்படும் எனவும் சிவபுராணங்களில் கூறப்பட்டுள்ளதாம்.
மேலும், சாதரண நிறத்தில் இருக்கக்கூடிய ஒருவரின் உடல் திடீரென வெள்ளையாகவோ அல்லது மஞ்சளாகவோ மாறி வருகிறதென்றால், அதிலிருந்து, ஆறு மாதங்களில் அவரின் இறப்பு நிகழும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேப்போன்று, நாக்கு மற்றும் தொண்டை பகுதிகளில் ஒருவருக்கு வறட்சியாகவும் மற்றும் அது அதிகரித்து கொண்டே இருந்தால் அந்த நபர் வெகு விரைவில் உயிரிழப்பார் எனவும் அர்த்தமாகும்.
ஒரு மனிதனுக்கு தன் இடது கை பயத்தின் காரணமாக தொடர்ந்து விடாமல் நடுங்கினால் அந்த மனிதரானவர் ஒரு மாதத்தில் இறந்து விடுவார் எனவும் சிவபுராணம் சொல்கிறது.
எந்த ஒரு நபரால் நிலா மற்றும் நட்சத்திரங்களை கண்களால் சரியாக பார்க்க முடியவில்லையோ அந்த நபரை எமன் நெருங்கி கொண்டிருக்கிறான் என அர்த்தமாகும்.
கருடன், காகம், புறா யார் தலையில் வந்து அமர்கிறதோ அது அவர்களுக்கான மரண அறிகுறி என்கிறது சிவ புராணம்!
எண்ணெய் மற்றும் தண்ணீரில் ஒரு பிரதிபலிப்பு தோன்றுமல்லவா? அது ஒருவரின் கண்களுக்கு தெரியவில்லை என்றால் அவருக்கு ஆறு மாதத்தில் உயிரழப்பு ஏற்படலாம்.
எந்தவொரு விடயத்தையும், முக்கியமாக ஒருவரால் நெருப்பை தெளிவாக பார்க்க முடியவில்லை என்றால் அவர் வீட்டு வாசல் கதவை எமன் தட்ட போகிறான் என சிவபுராணம் சொல்கிறது.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com