பீதியை கிளப்பும் சு.சாமி : நாளை முக்கிய தகவலை வெளியிடுகிறார்?!

                                                    
பாஜக மூத்த தலைவரும் எம்.பியுமான சுப்பிரமணியன்சாமி நாளை பிப்ரவரி 20ம் தேதி முக்கிய தகவல் ஒன்றை வெளியிடுவதாக கூறியுள்ளார்.
இது பற்றி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்:
நாளை முக்கியமான ஒரு தகவலை வெளியிடப்போகிறேன். அவர் மிகப்பெரிய அரசியல்வாதியாக இருக்கக்கூடும்.
அவர் மீது விசாரணை நடைபெறும் பட்சத்தில் மேலும் ஒருவரும் சிக்க போகிறார் என்று பீதியை கிளப்பி உள்ளார். இதனால் அரசியல்வாதிகள் பயத்துடன் உள்ளனர். இவரது பதிவை பார்த்து பல அரசியல் தலைவர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
Share:

இளநீர்-ஐ இப்படியும் விற்கலாம்..! கேரள சேட்டனின் ஸ்மார்ட்டான ஐடியா..!

                                                         


இளநீர் வங்கி குடிக்கலாம் என்றால் இளநீர் கடையைத் தேடி கண்டுபிடிப்பதற்குள் கண் கட்டிவிடும். இப்படி இருக்கும் இளநீரை பாட்டிலில் அடைத்து விற்று லாபம் பார்க்கலாம் என்ற முயற்சியில் இறங்கிய ஒருவரின் கதை பற்றித் தான் நாம் இன்று பார்க்க இருக்கின்றோம்.
இயற்கையான இந்த இளநீரில் எந்த ரசாயன கலப்படமும் இல்லாமல் நாம் வைட்டமின் சி, வைட்டமின் பி, பொட்டாசியம், கால்ஷியம், இரும்பு சத்துடன் குளுக்கோஸ் போன்றவை கிடைக்கும்.
ஒலிம்பிக் விளையாட்டில் போட்டியில் பங்கேற்பவர்களுக்குச் சத்தான பணங்களாக இளநீர் அளிக்கின்றனர். இப்படிப் பட்ட இளநீர் பாகெட்களில், பாட்லிகளில் எல்லாம் அடைத்து வைத்து விற்பனை செய்து வருவது மக்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படி கேரளாவில் வணிகம் செய்யும் ஒருவருடைய கதையைத் தான் நாம் இங்குப் பார்க்க இருக்கின்றோம். இந்த கட்டுரை பல பேருக்கு இத்தொழிலை துவங்கவும் ஒரு வழிக்காட்டியாக அமையும்.
கேரள மாநிலத்தில் உள்ள வைக்கித்தில் உள்ளவர்கள் தென்னை மரங்கள் வைத்துத் தான் பெரும்பாலும் பிழைப்பை நடத்தி வருகின்றனர். இதற்காக இங்கு உள்ள டிவி புரம் ஃபார்மஸ் சர்வீசஸ் வங்கி இளநீர் உள்ளிட்ட பானங்களை விற்பனை செய்யும் பிரிவை நடத்தி வந்தது. இந்தப் பிரிவு நட்டத்தில் இயங்கிவந்த நேரத்தில் பைஜு என்பவர் தான் இந்த இளநீர் பிரிவை எடுத்து நடத்தகின்றேன் என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நிர்வாகம் இளநீர் பிரிவை பைஜுவிற்கு லீஸில் அளித்தது. இதில் இருந்து பெறும் லாபத்தில் ஒரு பங்கை வங்கிக்கு அளித்தால் போதும் என்று ஒப்பந்தமும் போடப்பட்டது.
நிறுவனத்தை எடுத்து நடத்தும் பொறுப்பு பைஜுவிற்கு வந்த போதிலும் வங்கி எப்படி நட்டத்தைச் சந்தித்ததோ அதையே இவரும் சந்தித்தார். பின்னர் தனது விற்பனை முறையை வலிமை படுத்த திட்டம் போட துவங்கினார் பைஜு. இதற்காக மார்க்கெட்டிங் குழு ஒன்றை உருவாக்கி சந்தை நிலவரத்தை ஆராய்ந்து நிரந்தரமான விலை, பிறாண்டு போன்ற சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்.

Share:

பாம்பின் விஷத்திற்கும், வெற்றிலைக்கும் இம்புட்டு சம்பந்தமா?

                                                    
ஆன்மீகத்திற்கு பயன்படும் வெற்றிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. வெற்றிலைச்சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடன் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறுநீர் நன்கு பிரியும்.
வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும். வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.
வெற்றிலை, பாக்கு போடும்போது முதலில் பாக்கை மட்டும் போடக் கூடாது. இது குற்றமாகும். பாக்கை மட்டும் வாயிலிட்டு மென்று உமிழ்நீரை விழுங்கும் போது இதன் துவர்ப்பினால் கழுத்துக் குழல் சுருங்கி நெஞ்சு அடைக்கும்.
மயக்கம், மூர்ச்சை அடைய ஏதுவாகும். மேலும் சொந்த பந்த உறவினர்கள் பிரிந்து விடுவர் என சாஸ்திர விதிகள் கூறுகிறது.
அதனால் முதலில் வெற்றிலையை மென்று பின்பு பாக்கை வாயிலிட்டு மெல்ல மகா விஷ்ணுவின் இடது மார்பில் வாழும் பூமகள் மகாலட்சுமியின் அருள் கிட்டும்.
அடைக்காய் தின்பதில் ஊறுமுதல் நீர் நஞ்சாம் அதி பித்தம்
இரண்டாவதூறு நீரே கடையமிர்தம் மூன்றாவதூறு நீர் தான்
கனமதுர நான்காவதூறு மந்நீர் மடையெனவே ஐந்தாறிற்
சுரந்துள் ஊறி வருநீர் களைச் சுகித்து தடையுருப் பித்தமொடு
மந்த நோயும் தளர்பாண்டு நோயும் உண்டாம் தரம் சொன்னோம்.
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து உண்ணும் போது முதலில் வாயில் ஊறும் உமிழ்நீர் நஞ்சாகும் இதனை உமிழ்ந்துவிட வேண்டும். இரண்டாவது மெல்லும் போது ஊறும் உமிழ்நீர் அதிக பித்தமாகும். இதனையும் உமிழ்ந்து விட வேண்டும்.மூன்றாவது மெல்லும் போது வாயில் ஊறும் உமிழ்நீர் அமிர்தமாகும். இதனை மட்டும் விழுங்க வேண்டும்.
நான்காவது ஊறும் உமிழ்நீர் அதிக இனிப்பாக இருக்கும் இதனை விழுங்கலாம். இதன் பிறகு ஊறும் உமிழ்நீரை விழுங்கக்கூடாது அதனால் மந்தம், பித்தம், பாண்டு போன்ற நோய் உண்டாகும். வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.
Share:

ஆளுநருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீர் சந்திப்பு!

                                                
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசிவருகிறார்.
அதிமுக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.
சட்டசபையில் நேற்று நடந்த பெரும்பான்மை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றிபெற்றதையடுத்து, மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிவருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
Share:

திமுக எம்எல்ஏக்களுடன் ஸ்டாலின் திடீர் சந்திப்பு : அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த ஆலோசனை?

                                               
சென்னை அறிவாலயத்தில் இன்று காலை 10.45 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த ரகளையைத் தொடர்ந்து, பேரவையிலிருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம், மு.க.ஸ்டாலின் சட்டை கிழிப்பு ஆகியவற்றை குறித்தும் ஆலோசிக்கபட உள்ளதாக தெரிகிறது.
மேலும், தமிழகம் முழுவதும் நேற்று திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வன்முறையில் ஈடுபட்டதால், ஏராளமானோரை போலீசார் கைது செய்துள்ளது குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
Share:

சசிக்கு 4 வருஷம், எடப்பாடிக்கு 6 மாசம்! மார்கண்டேய கட்ஜூ அதிரடி!

                                                        
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 4 வருட தண்டனை சிறையில் தான் இருக்க வேண்டும். அவரின் மறு ஆய்வு மனுவால் எந்த பலனும் கிடைக்காது என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு வருகை தந்த மார்க்கண்டேய கட்ஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது; தமிழக முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் விசுவாசி என்று கேள்விப்பட்டேன்.
6 மாசம் அவகாசம் கொடுப்போம் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசுக்கு 6 மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும். அதன்பிறகுதான் அவர்களுடைய செயல்பாடு குறித்து விமர்சிக்க வேண்டும்.
சசி மேல்முறையீடு செய்யமுடியாது சொத்து குவிப்பு வழக்கில் தன் மீதான தீர்ப்பை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு செய்ய முடியாது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு இறுதியானது.
மறுஆய்வு மனு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம். பெரும்பாலான வழக்குகளில் மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடிதான் செய்யப்பட்டுள்ளன. சசியால் வெளியே வரமுடியாது மறுஆய்வு மனுவால் எந்த பலனும் கிடையாது.
ஆகவே சசிகலா 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும். வெளியே வர முடியாது. இவ்வாறு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியிருக்கிறார்.
Share:

‘‘திமுகன்னா தில்லுமுல்லு ரவுடி கட்சி’’ விஜயகாந்தின் வெட்டவெளிச்சம்

                                                    
தமிழக சட்டப்பேரவையில் நடந்த அசாம்பாவித சம்பவங்கள் குறித்து, தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில், நேற்று நடந்த சட்டசபை நிகழ்வுகள் எல்லாமே அவை மரபுகளை முற்றிலும் மறந்து செயல்பட்டுள்ளனர். அதிமுகவும், திமுகவும் பதவிக்காகவும் ஆட்சிக்காகவும் அதிகாரப் போட்டியில் தங்களது நாடகங்களை அரங்கேற்றி வருவது தெளிவாகத் தெரிகிறது.
சபாநாயகர், தன் சட்டையை கிழித்ததாகவும், தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறார். ஆனால், சட்டை கிழிக்கப்பட்டதாக சபாநாயகர் நீலிக்கண்ணீர் வடிப்பதாகக் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியே வந்து நிருபர்கள் மத்தியில் கூறுகிறார்.
சபாநாயகரை பேசவிடாமல் தடுப்பது, அவரது இருக்கையில் அமருவது, மைக்கை பிடுங்கி அவரிடம் நீட்டி பேசு பேசு என தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபடுவது, கையை பிடித்து இழுப்பது, சட்டையை கிழிப்பது, காகிதத்தை கிழித்து வீசுவது போன்ற பேரவை நிகழ்வுகளை பார்க்கும் போது, ‘‘திமுக என்றாலே தில்லுமுல்லு கட்சி என்றும்; ரவுடி கட்சி’’ என அழைக்கப்படுவதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது. இது கண்டனத்துக்குரியது என்று விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Share:

150 ஆண்டுகளுக்குப் பின் குமுறுகிறது இந்தியாவின் ஒரேயொரு எரிமலை!

                                                                  


இந்தியாவின் ஒரேயொரு எரிமலையான பெரன் தீவு எரிமலை, 150 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் குமுறத் தொடங்கியிருப்பதாக கோவாவில் இயங்கிவரும் தேசிய கடல்வள ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. புகைமூட்டமாகக் காணப்படும் இந்த எரிமலையில் இருந்து எரிமலைக் குழம்பு வெளிப்பட ஆரம்பித்திருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்தமான் - நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் ப்ளையருக்கு சுமார் 140 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள இந்த எரிமலை, கடைசியாக 1991ஆம் ஆண்டு சாம்பல்களை மட்டும் விசிறியது. அதன்பிறகு எந்தவிதமான மாற்றங்களும் இந்த எரிமலையில் ஏற்படவில்லை.
இந்த நிலையில்தான் இப்போது மீண்டும் அந்த எரிமலை குமுறத் தொடங்கியிருக்கிறது. ஆய்வாளர் குழுவொன்று எரிமலைக்குச் சுமார் ஒரு மைல் தொலைவில் இருந்தபடி நிலையை அவதானித்து வருவதாகவும், அவ்வப்போது ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு லாவா வெளிவருவதைக் காணக்கூடியதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:

குழந்தையை ஏரியில் வீசியெறிந்த தாய் : தாயாக மாறிய பெண் பொலிஸ் அதிகாரி:நெகிழ்ச்சி சம்பவம்

                                                                      
இலங்கை மொனராகலை கச்சேரி சந்தியில் 4 மாத பெண் குழந்தை ஒன்று ஏரியில் வீசப்பட்ட நிலையில் மக்களால் காப்பாற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்த குழந்தையை புத்தல பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே ஏரியில் வீசியுள்ளார். அந்தப் பெண் குழந்தையின் தாய் எனவும் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏரியில் மீட்கப்பட்ட குழந்தையை மொனராகலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெண் பொலிஸ் அதிகாரிகள் அந்த குழந்தை குளிப்பாட்டி பால் கொடுத்து பராமரித்துள்ளனர்.
எனினும் குறித்த குழந்தை அவரின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Share:

முதலமைச்சர் போன்று எதிர்கட்சித்தலைவருக்கும் மரியாதை அளிக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்.!

                                                  
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நிகழ்வு மிகவும் கண்டிக்கத்தக்கது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கன்னியாகுமரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
முதலமைச்சருக்கு அளிக்க வேண்டிய மரியாதையை எதிர்க்கட்சித் தலைவருக்கும் அளிக்க வேண்டும்.
மேலும், மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்திற்கு செல்லும்போது வாகனத்தை வெளியிலே தடுத்து நிறுத்தி சோதனை செய்தது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார்.
Share:

நடிகை பாவனாவை கடத்தி மூன்று இளைஞர்கள் பாலியல் கொடுமை! கேரளாவில் பரபரப்பு

                                                 
பல தமிழ்படங்களில் நடித்தவர் நடிகை பாவனா. இவர் கேரள மாநிலம் கொச்சியில் நடந்த ஒரு சினிமா படப்பிடிப்பில் கலந்து கொண்டு இரவில் காரை தானே ஓட்டியவாறு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த ஒரு கார், அவர் கார் மீது மோதி நின்றது. காரில் இருந்து மூன்று இளைஞர்கள் கீழே இறங்கி, பாவனாவிடம் தகராறு செய்தனர்.  அப்போது பாவனா காரை விட்டு கீழே இறங்கினார்.
உடனே அந்த மூன்று இளைஞர்கள் பாவனாவை, தங்கள் காரில் வலுக்கட்டாயப்படுத்தி ஏற்றினர். கார் அங்கிருந்து புறபட்டு சென்றது. காரில் செல்லும் போது நடிகை பாவனாவை இளைஞர்கள் பாலியல் தொந்தரவு செய்துள்ளனர்.
சுமார் இரண்டு மணிநேரம் காரில் வைத்து பல இடங்களுக்கு சுற்றிய இளைஞர்கள் பாவனாவிடம் இருந்த செல்போன் பணத்தை பிடிங்கி கொண்டு ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கீழே இறக்கிவிட்டு சென்றது.
இது குறித்து கேரளா போலீஸில் பாவனா புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில் பாவனாவின் முன்னாள் கார் டிரைவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு கேரள மாநில அரசு மற்றும் சினிமா துறையினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Share:
Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com